உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 சின்னக் குழந்தையை வண்டியிலே சோணாசலம் வைத்துத் தள்ளிக்கொண்டு ஆயா ஒருவள் வருகிறாள்.] [திடீரென்று அவளுக்குக் காக்காய் வலிப்பு.] [கீழே வீழ்கிறாள்- வண்டி கவிழ இருக்கிறது.) [சோணாசலம், பார்த்துவிட்டுப் பதைத்தோடி வந்து, வண்டியைப் பிடித்துக் கொண்டு அவளையும் காப்பாற்றுகிறான்.) [அவள் கொஞ்சம் மூர்ச்சை தெளிந்ததும் கும்பிடு கிறாள்.] ஆயா : குலதெய்வம் போல வந்திங்கய்யா! கோடி புண்யம் உங்களுக்கு. சோ: ஏம்மா, உனக்கு இது மாதிரி வலி ஆயா: கொஞ்சநாளா இந்தச் சனியன் என்னைப் பிடிச்சிகிட்டு வாட்டுது- மந்தரம் மருந்து எல்லாம் செய் தூச்சி சோ : மயக்கம் இன்னும் தெளியலே போலிருக்கே. ஆயா: ஆமாம்--ஆனா,குழந்தையைப் பொழுதோடே கொண்டு போய்ச் சேர்க்கோணும்- சோ: ஐயோ, பாவம்! ஆயா: இரக்கமான மனசய்யா உங்களுக்கு. உங்களாலே தான், புள்ளே புழைச்சுது. வண்டி கவிழ்ந்து போயிருந்தா, என்ன கதியாவும் குழந்தை! வீடு? சோ: குழந்தை, ரொம்ப அழகா இருக்கும்மா! யாரு ஆயா: கலெக்டரய்யா வீட்டுக் குழந்தை. சோ : இலட்சணமா இருக்கு.