உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோணாசலம் 71 ஆ: அதுக்கு என்னங்க குறை. கெலெக்டரய்யா சம் சாரம், ஒரு பெரிய பணக்கார வீட்டுப் பெண்ணு. குழந்தை மேலே தாத்தாவுக்கு உசிரு. அவர்தான், நேத்து செய்து போட்டாரு, அந்தப் புதுசெயின். ஆறு சவரன். [மறுபடி மயக்கம்.] {கீழே சாய்த்துவிட்டு ஓடுகிறான், தண்ணீர் கொண்டு வர. சட்டி ஓட்டில் தண்ணீர் கொண்டுவந்து தெளிக் கப் போகும்போது, செயின் தெரிகிறது—புத்தி மாறு கிறது- செயினைத் தூக்கிக் கொண்டு ஓடிவிடுகிறான்] (அவ்வழியே ஒரு வாலிபன் வருகிறான்- கீழே வாயில் நுரை தள்ளியபடி விழுந்து கிடப்பவளைக் கண்டு, பச் சாதாபப்பட்டு} அட்டா! ஏழை படும்பாடு, எப்படி எப்படி எல்லாம் இருக்கிறதப்பா, இந்த உலகிலே. அம்மா! அம்மா! [மெதுவாகக் கண்திறந்து மிரள மிரள விழிக்கிறாள்.] ஆயா: மறுபடியும் வந்துவிட்டுது பாத்திங்களா, அந்த மயக்கம் - நல்ல வேளை, நீங்க இருந்து, காப்பாத்தினீங்க. வா: மறுபடியும் மயக்கமா? இதற்கு முன்னே ஒரு தடவை மயக்கம் வந்ததா உனக்கு? ஆயா: என்னய்யா இது, இப்படிக் கேட்கறே! நீதானே முன்னே என்னைக் காப்பாத்தினே! வா: நானா? [குழந்தையைப் பார்த்து] ஆயா: ஐயோ! செயின்! அடபாவி! செயினைத் திருடிக் கிட்டானே. (கூச்சலிடுகிறாள்.] [சிலர் ஓடி வருகிறார்கள்.]