உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 சோணாசலம் ஆயா: ஐயா, இந்த அநியாயத்தைக் கேளுங்க. எனக்கு காக்கா வலி வந்துவிட்டது. இந்த ஐயாதான் காப்பாத்தி னாரு - மயக்கம் தெளியறதுக்குள்ளேயே மறுபடியும் வலி வந்துடுச்சி; நான் கீழே விழுந்து,விட்டேன்- என்னிடம் ரொம் யப் பரிதாபம் காட்டி, பசப்பினான் இந்தப் பாவி - படுபாவி! குழந்தே கழுத்திலே இருந்த செயினை வா: செ! ராஸ்கல்! யாரைப் பார்த்துத் திருடன்னு சொல்கிறே.ஆளைப்பார்த்தா கூடவா,மனுஷாளுடைய தரா தரம் தெரியலே? கும்பலில் ஒருவன்: அட்டே! மகா, தராதரம் கண்ட வருடா இவரு. ஏண்டா! திருட்டுப்பயன்னா அவன் என்ன, சதாரம் டிராமாவிலே வருகிற திருடன் மாதிரியாகத்தான் இருப்பானா? உனக்கு என்னவாம்? இவரு உருவைப் பார்த் தாலே, யோக்யருன்னு தெரியுதாம். வேறொருவன்: நெத்தியிலே எழுதி ஒட்டி இருக்குது. வாலி டே! உளறாதிங்க. அம்மா! சரியாகப் பார்த்துச் சொல்லு. நானா இதற்கு முன்பு மயக்கம் வந்தபோது இருந் தேன். ஆயா: ஆமாம். ஐயோ! செயின் போயிடுத்தே. நீதான் இருந்தே இங்கே. எனக்கு மயக்கமா இருந்தது. சரியாகப் புரியலையே. வேறே ஆள் இருந்தானோ என்னமோ! அதுவும் தெரியலே. கும்பலில் ஒருவன்: அந்த மாதிரியும் திருடறது உண்டு. இரண்டு ராஸ்கலா வந்திருப்பானுங்க. ஒருத்தன் தூக்கிவிட்டு ஓடி விட்டிருப்பான்- இவன் அதை மறைக்க இங்கே நன் னுக்கிட்டு --ஜாலம் காட்டுகிறான்--டே! யாரு அவன், உன் பங்காளி(அடிக்கிறார்கள்.) [கான்ஸ்டபிள் அவன் கழுத்தைப் பிடித்துத் தள்ளிக் கொண்டு போகிறான்.