உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 F பலாபலன் 'நானா பேசுகிறேன். பைத்யமே! கிரஹம் பேசுவதை நான் சொல்கிறேன். ஒவ்வொரு கிரஹமும், சஞ்சாரம் செய் கிறபோது ஏற்படுகிற பலாபலன்களைக் கண்டறிவதுதானே முக்கியம். இந்தக் காலத்திலே, கிரஹ சஞ்சாரத்தைப் பற்றிய ஞானமே இல்லா தவாளெல்லாம், 'பலகரையை வைத்துப் பார்ப்பது, குருவியைக் கேட்பது என்று, ஏதேதோ பொய்யும் புரட்டும் செய்து, பணத்தைத் தேடுவதிலே ஈடுபடுவா. நான் அப்படியா! சனி, எந்த இடத்திலே இருக்கிறான், அங்கார கன் என்ன செய்கிறான், புதன் என்ன சொல்றான், வியா ழன் என்ன பண்ணுவான் என்று இப்படி, அந்தந்த கிர ஹத்துடைய நிலையைப் பார்த்து, கணித்து, சரி, மூணும் மூணும் ஆறு, ஆறுடன் நாலு சேர்ந்தா பத்து- என்பது போல, திட்டமாகச் சொல்லுவேன். அதுபோலத்தான், உன் புருஷன் ஜாதகத்தை நன்றாகப் பார்த்துச் சொல்கிறேன், சூரியனுடைய பார்வை தீட்சணியத்தாலே காய்ச்சல் அதிக மாக இருந்தாலும், சனி இப்போது இருக்கிற இடம், அவ் வளவு கெட்ட இடமல்ல; ஆகையாலே, உயிருக்கு ஆபத்து நிச்சயமாக இராது; படிப்படியாக ஜுரம் குறையும்.பயப் பட வேண்டாம்; எதற்கும் சூரியனுக்கும் சனி பகவானுக்கும் ஒரு மண்டல விளக்கு ஏற்று, நல்லது. எல்லாம் கணக்குத் தானே. காரணமில்லாத விவகாரமா! மஞ்சளும் சுண்ணாம் யும் சேர்ந்தா, இரத்த நிறமாகிறது போலத்தான், கிரஹங் கள் ஒன்றோடொன்று கொள்கிற சம்பந்தா சம்பந்தத்தா லேயே பலாபலன் உண்டாகும். சம்பந்தா சம்பந்தம் -- பலா பலன்-பர்வை தீட்சண் யம் -- கிரஹ சஞ்சாரம் இவைகளை எல்லாம் விளக்கிவிட்டு, கமலம்மாள் கொடுத்த 'சில்லரை'யைக் கணக்குப் பார்த்து, முடிந்து கொண்டு, ஜோதிடர் குப்பய்யர் வீடு போனார். கமலம்மாள் ஐயர் சொன்ன கணக்கு, பொய்யாகாது; அவர் தான் பலகையிலே இப்படியும் அப்படியுமாக ஏதேதோ கோடு போட்டு, கட்டங்கள் அமைத்து, ஒவ்வொரு கட்டத் துக்குள்ளேயும், ஒவ்வொரு கிரஹத்தை அடைத்துக் கணக குப் பார்த்துச் சொன்னாரே என்று எண்ணாமலிருக்க்