உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பலாபலன் 75 முடியுமா? மேலும் அவளுக்கு அஷ்டமத்தில் சனி; அங்காரக நிலை; சூரியனுடைய பார்வை என்பன போன்றவைகள் விளங்கவில்லை என்றாலும், மூணும் மூணும் ஆறுபோல, மஞ்சளும் சுண்ணாம்பும் சேர்ந்தால் இரத்த நிறம் என்பது போல, என்று புரியக்கூடியதைச் சொன்னாரே. ஐயர். அத னால் அவருடைய வாக்கு, பொய்யாகாது என்ற திடமான நம்பிக்கை ஏற்பட்டது. ஏனோ எப்படியோ, அவளுக்குத் தெரியாது - குருவி எடுத்துக் கொடுத்த ஏடு, ஐயர் சொன்ன தற்கு நேர் மாறாக இருந்தது. அதுபற்றி அவளுக்குச் சற்றுக் கவலைதான்- பயமுங்கூட. குருவி எடுத்துக் கொடுத்த காகிதத்தில். "சனியவன் கோபத்தாலே மேலிடம் சென்றதாலே சளி ஜுரம் ஏறும், மாறும்- சூரியன் ஆணையாலே. என்று இருந்தது. குருவி சனிமீது குற்றம் சாட்டிற்று; குப்பய்யர் சூரியன் மீது பழியைப் போட்டார். ஆண்டவன் மீது பாரத்தைப் போட்டுவிட்டு, 'கமலம்மாள்' தன் கணவனின் 'கால்மாட் டில்' உட்கார்ந்து கொண்டிருந்தாள். சின்னப்பனுக்கு, முறைஜுரம் ஒரு சமயம், 'இப் பவோ பின்னையோ' என்று எண்ணக்கூடியபடி இருந்தது. வேறு சில சமயத்திலே, 'பரவாயில்லை, முகத்திலே தெளிவு வந்துவிட்டது --- வாய்க்கசப்பும் சற்றுக் குறைவுதான்' என்று கூறக்கூடிய விதத்திலே இருந்தது, என்றாலும், சின்னப்ப னுக்கு என்னமோ, நண்பர்கள் சொன்ன நல்வாக்கு, குப்பய் யர் சொன்ன கிரஹக்கணக்கு எதுவும் திருப்தியோ நம்பிக் கையோ தரவில்லை. ஜோதிடத்திலே, அவனுக்கு நம்பிக்கை இல்லை; சு.ம. என்பதல்ல பொருள். நோன்பு பூஜை களைத் துளியும் தவறாதபடி செய்பவன்தான். ஆனால், குப் பய்யர் போட்டுக் காட்டிய கணக்குச் சரியல்ல என்பது அவன் எண்ணம். அந்தக் கணக்கு மட்டுந்தானா? இதோ மற் றொன்று! !