உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 மாலையிலே ஆறு மணிக்கு இரவு எட்டுக்கு இரவு பத்து மணிக்கு காலையிலே எட்டு மணிக்கு காலையிலே பனிரண்டுக்கு பிற்பகல் மூன்று மணிக்கு பிற்பகல் நாலு மணிக்கு பலாபலன் 101 103 102 101 104 103 102 டாக்டர் சுதர்சன், இப்படி ஒவ்வொரு தினமும் கணக் கெடுக்கச் செய்து, பார்த்து வந்தார். ஜூரம் எந்தெந்த நேரத்தில், எவ்வளவு எவ்வளவு 'டிகிரி' அதிகமாகிறது,எப் பொது குறைகிறது என்று பார்க்க. இந்தக் கணக்கை ஆதார மாசுக் கொண்டு, டாக்டர் சுதர்சன், ஜுரம் காலையிலே தொடங்கி, பகலெல்லாம் வளர்ந்து, மாலையிலே குறை வதுபோல் காட்டி, இரவு ஜுரம் ஏறி, பிறகு படிப்படியாகக் குறைகிறது என்று கூறினார். இந்த விவரத்தை, ஏதோ ஒரு பெயருக்குள் அடக்கி, வைத்ய சாஸ்திர முறைப்படி கூறி னார். அவருடைய கணக்கு முறையும் தவறல்ல. ஆனால் சின்னப்பனுக்கு, அவர் கூறிய கணக்கும் சரியல்ல என்று தோன்றிற்று. டாக்டர் சுதர்சனுக்கு ஊரிலே மிக நல்ல பெயர்! சின்னப்பன், ஜோதிடக் கணக்கு, வைத்தியக் கணக்கு இரண்டையும், தன்னுடைய நோய்க்கு விளக்கம் தரக்கூடியன அல்ல என்று தீர்மானமாகக் கருதி, அடிக்கடி, மெல்லிய குரலில் "இதனால் எல்லாம் என்ன ஆகும்! சூரியனும் சனி யனும் ஒரே கூண்டிலே வந்தால் என்ன, ஒன்றை ஒன்று விழுங்கினால் என்ன! காலையிலே ஜுரம் ஏறி மாலையிலே குறைந்தால் என்ன! என் வியாதிக்கும், இந்தக் கணக்கு களுக்கும் என்ன சம்பந்தம்? இதனாலெல்லாம் ஒன்றும் இல்லை" என்று கூறுவான். "நிலத்தின் விலை குறைகிறதாமே? உண்மைதான்'- சேட்ராம்வால் தன் கடை மானேஜரைக் கேட்டார்.