உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$ . பலாபலன் 77 மானேஜர் மதுசூனர். "ஆமாம்," என்று சுருக்கமாகப் பதிலளித்தார். "சின்னப்பன் சேரவேண்டிய தொகை எவ்வளவு?- சேட் கேட்கிறார். சேட்டிடம், மானேஜர், சின்னப்பன் சேரவேண்டிய பாக்கித் தொகையைக் குறித்துத் தருகிறார். சேட், அந்தக் கணக்கை வாங்கிப் பார்த்துவிட்டு, "ஏக்கர், அயன், என்ன விலைதான் விற்கிறது இப் போது?" என்று கேட்க, மானேஜர், “இரண்டாயிரத்துக்கும் குறைவுதான்" என்று பதிலளிக்கிறார். "இரண்டாயிரம் என்று வைத்துக் கொண்டாலும், அவனுக்கு இருப்பது நாலரை ஏக்கர்!-சேட் ஆயாசத்தோடு பேசுகிறார். 'ஆமாம்; பத்தாயிரத்துக்கும் போகாது' என்று பயம் காட்டுகிறார் மானேஜர். சேட், மறுபடியும் ஒரு முறை, மானேஜர் தந்த கணக்குக் குறிப்பைப் பார்க்கிறார்- துண் டுக் கடிதத்திலே இருக்கிறது சூரியனுடைய பார்வை, சனி யின் இடமாற்றம், தெர்மாமீட்டர் சகலமும். ஆனால் விவர மாக அல்ல, சுருக்கமாக 16000! சேட், மானேஜரைப் பார்க்கிறார் - மானேஜர் சேட்டைப் பார்க்கிறார்! இந்தக் கணக்கை, ஜோதிடரோ, வைத்தியரோ, பார்க்கவில்லை. சின்னப்பன் கண்முன் சதா இந்தக் கணக்குத்தான் தெரி கிறது. ஐயர், சூரியனிடம் வம்புக்குப் போகிறார். காய் கதிரோன் என்ன செய்வான். கடன் பட்ட நெஞ்சம் கன லைக் கொண்டுவிட்டது! கடன் கணக்கு கொடுத்த கவலையே, சின்னப்பனின் காய்ச்சலுக்குக் காரணம். இதனை அவன் அறிவான் ஆனால் காரணம் என்ன என்பதைக் கண்டறியப் பணி புரிந்த ஜோதிடரும், வைத்தியரும் இதை அறியவில்லை அவர்கள் சூரியனிடமும் தெர்மா மீட்டரிடமும், காரணம் காட்டும்படி கேட்டுக் கொண்டிருந்தனர்.