உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 பலாபலன் ஜோதிடர் சொன்னபடி ஒரு மண்டலம் விளக்கு வைக்க வேண்டுமெனக் கமலம்மாள் கூறினாள். "பைத்யம், கமலு! இதனாலே எல்லாம் ஒண்ணுமில்லே!" என்று கூறினான், சின்னப்பன் - விளக்கு ஏற்றவிடவில்லை. .. இந்த ஜுரத்துக்கு முக்கியமான மருந்து, 'சாத்துக்குடி ஜுஸ்_ அதை எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாகச் சாப்பிடு கிறாரோ, அவ்வளவுக்கவ்வளவு நல்லது"-டாக்டர் கூறி னார். "பைத்யம் கமலு உனக்கு! அநத டாக்டர், அதற்கு மேல் ஒரு பைத்யம்! இதனாலே எல்லாம் ஒன்றுமில்லை. விஷயம் தெரியாமல், நீங்கள் ஆளுக்கொரு தப்புக் கணக்குப் போட்டுக்கொண்டு கிடக்கிறீர்கள். சூரியன் பார்க்கிறானாம்; சனியன் மாறுகிறானாம் - பைத்யம்! இதனாலே எல்லாம் என்ன வரப் போகுது!" என்று சின்னப்பன் கூறினான்; பழ ரசம் சாப்பிட மறுத்தான். ஜுரம், திடீரென்று ஒரு நாள் குறையலாயிற்று. வேக வேகமாகக் குறைந்து, அடியோடு காய்ச்சல் நின்றுவிட்டது. வாய் கசப்பு ஆச்சரியகரமான முறையிலே மாறி விட்டது. சின்னப்பன் முகத்திலே நோய்க் குறியே போய்விட்டது. குப்பய்யர் சூரியனுடைய தீட்சணியப் பார்வை குறை யப் பதினைந்து நாட்கள் பிடிக்கும் என்றாரே, அந்தக் காலத் துக்கு முன்னதாகவே!! டாக்டர் கூறிய 'சாத்துக்குடி ஜுஸ் சாப்பிடாமலிருக்கும்போதே! ஒரு புதிய ஜோதிடர், ஒரு புதிய வைத்தியர், இந்த ஆச்சரியமான மாறுதலுக்குக் காரணம். "சுட்டுப்பட்டி ஜெமீன்தார், நம்ம ஊர் பக்கத்திலே நிலம் பார்க்கிறார்.-நோய் நிலை அறிய வந்த நண்பன் கூறினான் சின்னப்பனிடம். "சுட்டுப்பட்டியாரா!"- சற்று ஆயாசத்தோடுதான் கேட்டான் சின்னப்பன்.