உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பலாபலன் 79 "ஏக்கர் ஐந்து, ஆறு ஆயிரம் என்றாலும், முடித்துக் கொள்ள உத்தேசமாம், நண்பன் சொன்னான். " "நம்ம நாலரையைத் தள்ளிவிட்டு விடுங்களேன்- நோயாளி கூறினான். "ஒரே சதுரந்தானே!- நண்பன் கேட்டான். "ஆமாம்-ஒரே சதுரம்--நல்ல பாய்ச்சல்-ஆத்துக் கால் இருபோகம் - தங்கம் விளையும்." சின்னப்பன் வர் ணித்தான். 'இதுக்கென்ன, கசக்குதோ சுட்டுப்பட்டியாருக்கு. நீ சும்மா இரு. நான், முப்பதுக்கு முடித்துவிடுகிறேன்." என்று நண்பன் வாக்களித்தான். அதன்படியே செய்தும் முடித்தான். சேட்டின் கடனைத் தீர்த்துவிட்டு, மற்றதைப் பாங்கியில் போட்டான் சின்னப்பன். பாங்கிப் 'ப்யூன்' கொண்டு வந்த ரசீது புத்தகத்திலே, சின்னப்பன், கரண்ட் அக்கவுண்ட் 14000-00 என்று கணக்குக் குறிக்கப்பட் டிருந்தது. புதிய கணக்கு. சாத்துக்குடிச்சாறு செய்யக் கூடி யதைவிட அதிக பலனைச் செய்து காட்டிற்று! சூரியன் தீட் சணியமும், சனியின் இடபேதமும் இதற்குச் சாந்தி செய்ய, விளக்கு வைப்பதுமான சகல காரியமும், அந்த ஒரே ஒரு வரிமூலம் பூர்த்தியாகிவிட்டது. "குப்பய்யர் அப்போதே பார்த்துச் சொன்னாராம்!" என்று ஊரார் பேசிக் கொள்கிறார்கள். "டாக்டர் சுதர்சன், மணிக்கு மணி, ஜுரத்திலே வேக அளவைக் கணக்கெடுத்து, கண்ணுங் கருத்துமாக இருந்து மருந்து கொடுத்தார்-சொஸ்தமாகிவிட்டது--சின்னப்பன் பழையபடி கொழுக்கட்டை போலாகிவிட்டான்" என்றும் ஊர் பேசுகிறது. 'சூரியனுடைய பார்வை எவ்வளவு கெடுதல் செய்தா லும், சனி மட்டும், அஷ்டமத்துக்குப் போகாமலிருந்தால், ஆபத்து வரவே வராது. நம்ம சின்னப்பன் விஷயம் தெரியு