உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 ராஜபார்ட் மாக, வெல்வெட்டு மெத்தையாக, இரும்புப் பெட்டியாக உருவெடுத்துக் காட்டிற்று. நடிகர்கள் மட்டும் நூறு பேர்! எடுபிடிகள், எக்ஸ்ட்ராக்கள் முதலியவர்களைச் சேர்த்தால், ஒரு ஐம்பது தேறும். விருந்தாளிகள் ஒரு ஐம்பது பேர் இருக் கும் - ஆகமொத்தம், பகல் ஒரு மணிக்கு, சாப்பாட்டுக்கு, பந்தி உட்காருவதைப் பார்த்தால், குருமூர்த்திக்கு பரமா னந்தமாக இருக்கும். உள்ளூர் பெரிய மனிதர் யாராவது இரண்டு பேரை அழைத்து வருவார், இதைப் பார்க்கட்டும் என்பதற்காகவே. திண்டின்மீது சாய்ந்த குருமூர்த்தியின் மனக்கண்முன் நாலு நல்ல நடிகர்களே கிடையாது. இருந்த நாட்கள், வசூ லான பணம் கொட்டகை வாடகைக்கும், பிட் நோட் டீசுக்குமே போதுமானதாக இல்லாத காலம்; இன்னும் அதற்கும் முன்பு, கம்பெனியே இல்லாமல், அவ்வப்போது ஊருக்கு ஊர், சிற்சிலரைப் பிடித்து, ஸ்பெஷல் கற்றுக் கொடுத்து 'கூத்து' ஆடிவந்த காலம்- இவைகளெல்லாம் கவனத்திற்கு வந்தன. "கூத்தாடி குருமூர்த்தி என்ற பெயர் மறைந்து, "பாரதமாதா நாடகக் கம்பெனி முதலாளி குரு மூர்த்தி" என்ற பெயர் வருவதற்கு இடையில், அவர் பட்ட கஷ்டங்கள் பலப்பல. அவைகளை எல்லாம் எண்ணினார் அவருடைய முகத்திலே வெற்றிக்களை தாண்டவமாடிற்று. ஒரு கட்டு ரவேஸ்' வெற்றிலையுடன், மானேஜர் வந்து சேர்ந்தார். " "நேற்று வசூல் எவ்வளவு?" 'நேற்று கொஞ்சம் மட்டம். சிறு தூறல்.' "தொகை என்னய்யா?" "எழுநூற்று அறுபது! "இவ்வளவுதானா? "இவ்வளவுதானா!-- என்று அவர் கேட்டபோது, உள்ளூர அவருக்கே சிரிப்பு! ஏனெனில், அவர் 'அறுபது" ரூபா வசூலையே, 'அதிர்ஷ்டம்' என்று எண்ணி வந்த நாட்