உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரங்கதுரை 83 கள் உண்டு!! கம்பெனி மானேஜரிடம், அவர் பேசி வந்த பல விஷயங்களிலே முக்கியமானது ரங்கதுரையின் போட் டோவைப் பற்றியது. மானேஜர் அவசரமாகச் சென்று, போட்டோவைக் அழகான சட்டம் போடப்பட்டிருந்த கொண்டுவந்து, குருமூர்த்தியின் எதிரில் வைக்க, அவர், ரவி வர்மா தீட்டிய லட்சுமி படத்தின் பக்கத்திலே, துரையின் போட்டோவை மாட்டி வைக்கும்படிக் கூறினார். மானேஜர், லட்சுமி, சரஸ்வதி படங்களுக்கு நடுவில் இதைத் தொங்க விட்டார். இந்த மூன்று படங்களுக்கு மேலே, கம்பெனி முதலாளி குருமூர்த்தியின் பெரிய படம் ஒன்று இருந்தது. குருமூர்த்தி படங்களை மாறிமாறிப் பார்த்து மகிழ்ச்சி யடைந்து, மானேஜரைப் பார்த்து, "நம்ம துரையுடைய முகத்திலே இருக்கிற களை இருக்கு பார், அடடா, அற்புத மானது; அதுதான் 'லட்சுமிகளை'ன்னு சொல்வது” என்று பாராட்டினார். மானேஜர், அதைத் தொடர்ந்து, துரையின் கண்ணொளி, குரலின் இனிமை, சங்கீத ஞானம், நடிப்புத் திறமை, இவைகளைப் பற்றி, ஊரார் உயர்வாகப் பாராட்டு வது என்பவை பற்றிச் சரமாரியாகப் பேசிவிட்டு, "தப்பித் தவறி, ரங்கதுரை மோட்டாரில் கடைவீதிப் பக்கம் போய் விட்டால் போதும்; ஒரே கூட்டம்! 'அதோ பார், ராஜ பார்ட் ரங்கதுரை பாகவதர்' என்று கூவிக்கொண்டே கூட்டம் ஓடிவரும்! என்று முத்தாய்ப்பு வைத்தார். 'ஆமாம்! இப்போது நம்ம துரையின் பெயர் பிரபல்யமாகி இருக்கிறது. எப்படி ஆகாமல் போகும்? டபுள்ராயல் ஆறு ஆயிரம், சிங்கிள் ராயல் ஒரு பத்து, ஆறு ராயல் ஒரு ஏழு ஆயிரம், இப்படி அல்லவா, 'பப்ளிசிடி' ஏறி இருக்கு! ஊரிலே ஒரு மூலை முடுக்குக்கூட பாக்கி கிடை யாதே! போஸ்ட்டர் எங்கேயும் ஒட்டியிருக்கிறோம். அவ் வளவு விளம்பரமும், ரங்கதுரைக்குத்தானே! ஊர்ஜனங்கள், ராஜபார்ட் ரங்கதுரை பாகவதர் என்று புகழ்கிறார்கள் என் றால், இதிலே ஆச்சரியமென்ன?" என்று விளக்கத்தை விவர மாகக் கூறினார் குருமூர்த்தி. அவருக்கு, ரங்கதுரையிடம், கோபமோ, பொறாமையோ இல்லை. ஆனால், மனம் எனும் "