உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 ராஜபார்ட் கழனியில், இந்த விதையைத் தூவினால், பலன் தரும் அள வுக்குப் பலர், ஏர் உழுது இருந்த நேரம் அது! "ரங்கதுரையின் மனம் சுத்தமானது, அவனுடைய சாரீரத்தைப் போலவே!" C4 'அதனாலேதான், அவன் முன்னுக்கு வருகிறான்- நாமும் பணம் என்று பார்க்காமல், அவனுடைய பேரும் புகழும் வளர வேண்டும் என்று பாடுபடுகிறோம்.' 'இட்டார்க்கு இட்ட பலன்தானுங்களே.' " "அதுசரி. நல்லவர்களின் போக்கு அது. வேறு சிலது கள் இல்லையா? உண்ட வீட்டுக்கே இரண்டகம் செய்து கொண்டு!" "ஆனால் நம்ம ரங்குவின் சுபாவம் அப்படிப்பட்ட தல்ல. உங்களிடத்திலே அளவு கடந்த அன்பு. நேற்றுக்கூட, 'நாடகம்' பத்திரிகை ஆசிரியர் ரங்கதுரையிடம், உமது ஆசிரி யர் யார், எத்தனை வருஷமாக இந்த நாடகத் தொழிலில் இருக்கிறீர், நீங்கள் முதன்முதலா எந்த நாடகத்தில் நடித்தீர் என்றெல்லாம் கேட்டார். நம்ம ரங்குவின் பெருங்குணத் தைப் பாருங்கள், "என் ஆசிரியர் கலாகேசரி குருமூர்த் தியார்-நான் நாடகத் தொழிலிலே ஈடுபட்டதே அவருடைய சகாயத்தாலேயும், ஆசீர்வாதத்தாலேயும், யுந்தான்" என்று கூறினான். " சிட்சையாலே "நல்ல பிள்ளை, நம்ம ரங்கு! நல்ல மனம்- குணம்! கலாகேசரின்னு நமக்கு டைடிலே கொடுத்துவிட்டானா! நம்மிடம் அவனுக்கு உள்ளபடியே அவ்வளவு ஆசை. பாவம்! அவன் ஆசையை நாம் கெடுப்பானேன். இனி, போஸ்ட்டர், பிட்நோட்டீஸ், விளம்பரங்களிலே, நம்ம பேர் போடும் போது, கலாகேசரி குருமூர்த்தி என்றே போடு. ரங்குவுக்குத் திருப்தியாக இருக்கும். இவ்விதமான உரையாடலுக்குப் பிறகு, குருமூர்த்தி, வளரும் வசூலின் காரணமாக முகம் மலர்ந்து, அந்த வசூ