உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 ரங்கதுரை 85. லுக்கு முக்கிய காரணமாக இருந்துவந்த ரங்குவுக்கு. 'பாதாம் கலந்த பால் கொடு, பத்து ரூபாய் கை செலவுக்கு கொடு, படுக்கையிவே இன்னும் இரண்டு தலையணை தைத் துப்போடு, ஆர்ட் அட்டையிலே அவன் போட்டோ ஒரு பத்தாயிரம் அச்சிட்டு, அட்டை இரண்டணா விதம், தியேட் டரிலே விற்பனை செய்ய ஏற்பாடு செய், ரங்குவின் புகழ் பரவட்டும்" என்று கனிவுடன் புதிய புதிய கட்டளைகள் பிறப்பித்துவிட்டுக் கண் அயர்ந்தார். கம்பெனியில் அப்போது 'கந்தலீலா' நாடகம் - பிரமாதமான வசூல்! ராஜபார்ட் ரங்கதுரை பாகவதர்தான் முருகன்! மற்றப் பாகங்கள் வேறு பல நடிகர்கள்!! அவர்களின் பெயர், வெளியேகூடத் தெரி யாது. தெரிவிக்கும் வழக்கம் கிடையாது. குருமூர்த்தியின் குதூகலத்தைவிட ஒருபடி அதிகமாகவே இருந்தது. ரங்குவின் களிப்பு நாடகத் தொழிலிலே கிடைத்த நற்பெயர், செல்வாக்கு, ரங்குவின் இளம் உள்ளத்துக்குத் தேன் ஊற்றாக இருந்தது. குருமூர்த்தி, தன்னிடம் காட்டும் அன்பும், அக்கரையும், அவன் மனதை நெகிழச் செய்தது. மற்ற நடிகர்கள் கண்டு பொறாமைப்படும் அளவுக்கு, தனக்கு அவர் சலுகைகள் காட்டுவது, ரங்குவின் மனதிலே, அவர் மீது ஒரு பாசமே ஏற்படும்படிச் செய்துவிட்டது. குருமூர்த்தி, ரங்குவைப் பாகவதராக்கி, ராஜபார்ட்டாக்கி, ராக ஆலா பனராக்கி மகிழ்ந்தார். குருமூர்த்தியை கலாகேசரியாக்கி, ரங்கு மகிழ்ந்தான். ராஜபார்ட்டான • ஆலாபன ரங்கபாக வதரின் நடிப்பு மிகமிக அருமையாக இருந்தது- அவர், சாரீ ரத்தின் இனிமையும், சங்கீத ஞானமும், எப்படி இருந்தல் என்று, பொருத்தமான உபமானம் கூறவேண்டுமானாது, நவயுகக் கலாகேசரி குருமூர்த்தியார் கம்பெனியை நடத் தும் விசேஷத் திறமையும், திறமையுள்ள நடிகர்களைக் கண்டுபிடித்து அவர்களின் திறமைக் கேற்ற இடமளித்து, அவர்களை முன்னேற்றத்துக்குக் கொண்டுவரும் "பக்குவ மான முறை இருக்கிறதே, அதுபோன்று இருந்தது என்றுதான் கூறவேண்டும்--என்று ரசிகர்கள் பேசினர்; எழுதினர். அதாவது இருவரிடமும் நட்பும், அதனால் சிறுசிறு "