உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 ராஜபார்ட் பலனும் பெற்றவர்கள்! வேறு சிலர்-அவர்கள் தொகை குறைவு- இருந்தனர். குருமூர்த்தியிடம் பேசும்போது "ரங்கதுரையுடைய நல்லகாலம், அதிர்ஷ்டம், உங்களுடைய ஆதரவு கிடைத்தது. இப்போது அதனாலே, ராஜபார்ட் ஆனான்- பாகவதர் ஆனான்- நீங்கள் அவனுக்கு இவ்வளவு அன்பு காட்டியிரா விட்டால், அவன் சாரீரம் கட்டையாகி, சீந்துவாரற்று. எங்காவது பஜனை மடத்திலே போய். 'ராம நன்னுப் தீரா,வரா' பாடிக் கொண்டிருப்பான். அவனுடைய ஜாதக பலன், உங்களுடைய தயவு அவனுக்குக் கிடைத்தது" என்று பேசுவர். அப்போது குருமூர்த்திக்கு அறுபது ரூபாய் வசூலு டன் அல்லற்பட்ட காலம், நாலு நல்ல நடிகர்கள் கிடைக் காமல் கம்பெனி கஷ்டப்பட்ட நாட்கள், இவை மறந்து போகும் - டபுள் ராயல், சிங்கிள் ராயல்-ரங்கதுரைக்காகச் செய்த விளம்பரச் செலவு, இவை கவனத்திலிருக்கும். பெருமையுடன், "போகிறான் பாபம்! நமக்கு நாலு காசு செலவானாலும் பரவாயில்லை. அவன் முன்னுக்கு வந்தால் போதும்; அவன் அதை எண்ணினாலும் சரி, மறந்து மண் டைக் கர்வம் ஏறிவிட்டாலும் சரி, நாம் செய்ய வேண்டிய தைச் செய்கிறோம" என்று கூறுவார். விஷ விதையை அப் போது தூவுவர், “அவனுக்கு மண்டைக் கர்வம் பிடித்ததோ, ஒழிந்தான் அதோடு என்று வைத்துக் கொள்ளுங்கள். உங் களுடைய உதவி இல்லை என்றால், ராஜபார்ட்டுமில்லை; ராக ஆலாயனமும் இல்லை. பிறகு, அவன்பாடு திண்டாட் டந்தான்” என்று கூறுவர். குருமூர்த்தியின் புன்னகை, 'ஆமாம்” என்று கூறும். அதுபோலவே, ரங்கதுரையிடம் சென்று பேசுவர், 'முன்பெல்லாம் உங்களுக்குத் தெரியாது கொட்டகை இருக்கிற தெருவழியாகவே ஜனங்கள் நடமாட மாட்டார்கள். ராத்திரி பதினோருமணி வரைக்கும் பாண்டு வாசிப்பார்கள். வெளியே-டிக்கட் முப்பது நாற்பதுக்குக் கூட விற்பனையாகாது. சதா சர்வகாலமும், சாப்பாட்டுக் கஷ்டந்தான் கம்பெனியில். நடிகர் ஏது-டிரஸ் ஏது-சீன் -