உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரங்கதுரை 87 ஏது! நீங்கள் வந்து சேர்ந்த பிறகுதான் குருமூர்த்திக்கு 'சான்ஸ்'. ஆயிரம், எழுநூறு என்று வசூல் ஏறிற்று.உங்க ளுடைய சாரீரம், அவருக்குச் சம்பத்தாக முடிந்தது." என் பார்கள். ரங்கதுரை "அவருக்கு, கலையிலே ரொம்பப் பிரி யம். இதுபோலக் கம்பெனி வைத்து நடத்த ஆரம்பித்து இருபது வருஷங்களுக்குமேல் இருக்குமாமே" என்று புகழ்ச்சி யாகத்தான் பேசுவான். விஷ விதையைத் தூவுபவரோ, "நடந்தது இருபது ஆண்டுகளாக—ஆனால் கம்பெனியில் நல்லவர்களே நுழையமாட்டார்கள்; நாகரிகமான இரண்டு பாட்டுப்பாட ஒரு நடிகன் கிடையாது- மதுரை வீரன் கதை யும், மாடசாமி காமிக்கும் நடக்கும். கேட்பாரற்றுக் கிடந் தது. நீங்கள் வந்து சேர்ந்த பிறகுதான், கந்தலீலாவும் காதம் பரியும், டபுள்ராயலும், சினிமா ஸ்லைடும், கப்பும் கேடய மும், மாலையும், மரியாதையும், மதிப்பும் பணமும்! பெரு மையாக இப்போது பேசிக் கொள்கிறார், 'நம்ம கம்பெனி யைச் சாமான்யமாகக் கருதாதே! ராஜபார்ட்டாக ஆலாபன ரங்கதுரை பாகவதர் இருக்கிற கம்பெனி என்றால், அதிலி ருந்து, கம்பெனி எப்படிப்பட்டது என்று தெரிந்துகொள்ள வேண்டும்; குண்டு மல்லிப்பூ, குரோடென்ஸ் செடியிலே பூக் காது' என்று கதை அளக்கிறார்" என்று பேசுவர். "அவர் சொல்வது உண்மைதானே. குரோடன்ஸ் செடி யிலே, குண்டு மல்லிகை பூக்குமா? ஒரு உபயோகமற்ற கம் பெனியிலே, விஷயம் தெரியாத முதலாளியிடம் சிக்கியிருந் தால் நமது நடிப்பும், சங்கீதமும் விருத்தியாகி இருக்க முடி யுமா?" என்று வாதாடுவான் ரங்கதுரை. விஷப்பூண்டை விவசாயம் செய்து பழக்கமானவர்கள், 'உபமானம், எதற் கும் எப்படியும் சொல்லலாம். குண்டு மல்லி குரோடன்சிலே பூக்குமோ? என்று கூறிவிட்டால் தீர்ந்து போச்சா! நத்தை யிலே முத்தில்லையா? சேற்றிலே செந்தாமரை இல்லையா! அதுபோல, குருமூர்த்தியிடம் ஒரு ரங்கபாக தர் இருக்கிறார் என்று நாங்கள் கூடத்தான் உபமானம் கூறமுடியும்" என் பார்கள். ரங்கதுரையின் முகத்திலேயும் புன்னகை தவழும். கம்பெனிக்குச் சிறப்பளிக்கும் அளவுக்குத் தனது சங்கீதம்