உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 வளர்ந்திருக்கிறது; குருமூர்த்திக்கு இலாபம் ராஜபார்ட் கிடைக்கும் அளவுக்கு தன் நடிப்புத் தொழிலிலே நற்பெயர் கிடைத்திருக் கிறது என்று அந்தப் புன்னகை கூறும். உண்மை நிலையோ, இருவர் உள்ளங்களில் தவழ்ந்த எண்ணங்களுக்கும் விஷவித்திடுவோர் (மனதிலே இருந் ததோ இல்லையோ) உதட்டிலே தவழ்ந்து வந்ததுமான எண் ணங்களுக்கும் வெகுவெகு தொலைவிலே இருந்தது. இருவ ரில் யாரால் யாருக்கு இலாபம்,யாருடைய உதவியால் யார் சிறந்தனர் என்பதல்ல, முக்கியமானது. அது, நீர்மேல் குமிழி போன்ற விஷயம். குருமூர்த்தி- ரங்கதுரை கூட்டுறவால் ஏற்பட்ட உண்மையான பலன் என்னவென்றால், நாடகக்கலை நாட்டிலே பரவ, ஒரு சிறந்த சந்தர்ப்பம் கிடைத்தது. அந்தக் கலைத் துறைக்கே, இந் தக் கூட்டுறவின் பெரும்பலன் போய்ச் சேர்ந்தது--கலைத் துறைக்குப் போய்ச் சேர்ந்ததென்றால், கலை உள்ளம் படைத்த அசைவருக்கும் போய்ச் சேர்ந்தது என்றுதானே பொருள்! உண்மையில் பல்ன், குருமூர்த்திக்கும். ரங்குவுக் கும் கிடைத்ததைவிட நாடகக்கலைக்கே அதிசம்கிடைத்தது. ஒரு நல்ல நடிகளைக் காணவும், சுகமான சங்கீதத்தை அனு பவிக்கவும், நாகரிகமான நாடகங்களைப் பார்க்கவும், காசு செலவிட்டு கண் அரிப்பும், காது குடைச்சலும் பெற்று வந்த மக்களுக்கு, சுண்ணுக்கும், காதுக்கும் கருத்துக்கும் விருந் தும் கிடைத்து வந்தது. குருமூர்த்தி-ரங்கு கூட்டுறவு, கலைத் துறைக்கு, ஒரு புதிய, சிறந்த, தேவையான உதவி யாக இருந்தது. இந்த உண்மையை மறைக்குமளவுக்கு, டபுள் ராயல், சிங்கிள் ராயல் போஸ்ட்டர் பற்றிய பேச்சும், அறு வது வசூலான இடத்தில் ஆயிரம் வசூலாகிறது என்றபேச்சும் வளர்ந்தது. கம்பெனியினால்தான் ரங்கதுரை, பாகவத ரானார்'-ஒரு கட்சி; "ரங்குவால்தான் கம்பெனி உரு வாயிற்று"- மற்றோர் கட்சி. இப்படி ஒரு ஆபத்தான நிலைமை வளரல யிற்று-குருமூர்த்தி, ரங்கதுரை இருவ ருமே, அந்த நிலைமைக்குப் பலியானார்கள்-இருவரும் அறியாமலேயே.