உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரங்கதுரை 89 ஊருக்கு விடுமுறை பெற்றுப் போயிருந்த ரங்கு,கடி தம் எழுதியிருந்தான் குருமூர்த்திக்கு. 'இங்கு தாயாருக்கு இன்னும் நோய் குணமில்லை. அங்கு கம்பெனி வசூல் எப்படி? வசூல், ரொம்பக் குறைந்துவிடுமோ என்று கவலையாக இருக்கிறது. கூடிய சீக்கிரம் வந்துவிடுகிறேன். நான் வந்த பிறகு 'கந்தலீலா" துவக்கி ஒரு மாதம் நடத்தினால், இப்போது கம்பெனிக்கு நஷ்டம் வந்திருந்தாலும் படுத்திவிடலாம் " என்று எழுதியிருந்தான். சரிப் "வருஷம் பத்தானால்கூட, நம்ம ரங்கதுரைக்குக் கம் பெனியிடம் உள்ள அக்கரையிலே, நூற்றிலே ஒரு பாகம்கூட, மற்ற நடிகர்களுக்கு வருவதில்லை. தாயாருக்கு உடம்பு சரி யில்லை என்று ஊருக்குப் போயிருக்கிறான்; அந்த இடத் திலேகூட அவனுக்குக் கம்பெனியைப்பற்றிய கவலைதான்-- வசூல் எப்படி இருக்கிறது--கந்த லீலா போடலாம்- நான் வந்துவிடுகிறேன் சீக்கிரம் என்று கடிதம் எழுதுகிறான். இப் படிப்பட்ட குணசாலிகள் இருந்தால்தானே, கம்பெனி உருப் படும்' என்று பெருமையுடனும், பூரிப்புடனும் பேசிவிட்டு, டானிக் பாட்டிலும், சாத்துக்குடியும் வாங்கி அனுப்பி வைப் பார் குருமூர்த்தி என்றுதான், ரங்கு எண்ணினான. முன் பெல்லாம் அவ்விதந்தான் நடைபெறுவது வழக்கம். விஷப் பூண்டு முளைத்துவிட்ட நேரத்திலே இந்தக் கடிதம் வந்தது. எனவே விளைவு வேறாகிவிட்டது. “மண்டைக் கர்வத்தைப் பார்த்தாயா, இந்த துரைக்கு? இவன் இல்லாததாலே வசூல் 'டல்'லாகிவிட்டதாம்! கிண்டலாகக் கடிதம் எழுதியிருக்கி றான். கவலைப்படாதே. நான்வந்த பிறகு, கந்தலீலாபோட் லாம்; நஷ்டத்தை அப்போது சரிப்படுத்திவிடலாம் என்று கடிதம் போடுகிறான். இவன் இல்லாவிட்டால், நம்ம கம் பெனியே நடக்காது — நமக்கு வேறு நாதியே இல்லை என்று எண்ணுகிறான். இவனை நாம் பாகவதராக்கி, ராஜபார்ட் ஆக்கி, தோடிக்கும் தாளத்துக்கும் வித்தியாசம் தெரியாத அபசுரத்தை, ராக ஆலாபனராக்கி வைத்த பலன், இவன், நான் இல்லாவிட்டால் கம்பெனி எப்படி நடக்கும் என்று மறைமுகமாக, நம்மையே கேள்வி கேட்கும் நிலைமையை