உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 ராஜபார்ட் உண்டாக்கிவிட்டது" என்று கடுமையாகப் பேசி, மானேஜ ரைக் கூப்பிட்டு. நாளையோடு 'நல்லதங்காளை' முடித் துக் கொண்டு, இரண்டு நாள் லீவ் விட்டு கத்தலீலா ஆரம்பிக் கச் சொல்லு- போஸ்ட்டரும் போடு' என்றார். கடிதத் தின் விளைவாக இதைக்கூறுகிறார்என்பதறியாத மானேஜர், "ரங்கதுரை வருவதற்கு, இன்னும் இரண்டு வாரம் ஆகு மாமே, கந்தலீலா எப்படி?" என்று கேட்க, குருமூர்த்தி, "யாரய்யா சுத்த மடையனா இருக்கறே! கோழி கூவியா பொழுது விடியுது. கந்தலீலா, ரங்கன் வராமே நடக்காதா- நடக்கக்கூடாதா- நடந்ததில்லையா? ரங்கதுரைதானா கம் பெனி? ஏன் உன் கண்ணிலே தாமு, சோமு, இவனுங்களெல் லாம் படவில்லையா? சோமு, முருகன்-தாமு, வள்ளி- ஆமாம், டபுள் ராயல் போடு - சுகசாரீர சம்பன்ன சோமுன்னு போஸ்ட்டர் அடி: கலர் போஸ்ட்டர்" என்று உத்தரவிட்டார். பத்திரிகையிலே இதுபோல விளம்பரம் வருவதற்கும், ஊரிலே ரங்கதுரையின் தாயாருக்கு 'க்ஷயம்' என்று டாக்டர் கண்டுபிடித்து, ரங்கனுக்குக் கூறுவதற்கும், நேரம் சரியாக இருந்தது. ரங்கதுரையின் மனம் புண்பட் டது. எவ்வளவு உள்ளன்போடு உழைத்தும், கம்பெனியிடம் அக்கரைவைத்தும், முதலாளி கடைசியில் சமயத்தில் நம்மைக் காலை வாரிவிடத்தானே செய்கிறார். சோமுவை வைத்துக் கம்பெனி நடத்துவேன், தாமுவாலே நடக்கும். நீ அவசிய மில்லை என்று மறைமுகமாக நமக்குக் கூறத்தானே, நாமாகக் கடிதம் எழுதியும்கூட, இப்படி, நாடகத்தை, சோமுவைக் கொண்டு நடத்துகிறார். நன்றியை மறந்து நடந்து கொள் கிறார். எவ்வளவு பேர் நமக்குச் சொன்னார்கள், "நீ வராத முன்பு, கம்பெனி இப்படி இல்லை" என்று தூண்டினவர்கள், தூபமிட்டவர்கள் பேச்சை எல்லாம் அலட்சியப்படுத்தி, ஒரு நல்ல கம்பெனி நடக்க வேண்டும் - ஒரு நல்ல அனுபவமுள்ள வரால்தான் அதை நடத்த முடியும், குருமூர்த்தியார்தான் அதற்கு ஏற்றவர், என்று மனதார நம்பித்தானே உழைத்து வந்தேன் --- அதற்குப் பலன், இதுதானா! என்று எண்ணி வருத்தப்பட்டான்.