உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரங்கதுரை 91 'முதல் போகம் ஆயிற்று; அறுவடை முடிந்தது; இனி இரண்டாம் போகத்துக்கு விதை தூவ வேண்டியதுதான் என்று, விஷ விவசாயிகள் எண்ணினர் - மும்முரமாக அதிலே ஈடுபட்டனர் பயிர் செழித்தது! பாகவதர், 'ஆக்ட்" செய்யக் காணோமே, ஏன்?" குருமூர்த்தியைக் கேட்பர் சிலர்-கலைரசம் தேடுவோர். குருமூர்த்தி, அவர் கூறுவதன் பொருள் விளங்காதது போல இருந்துவிட்டு, "அடடே! ரங்கனைச் சொல்கிறீர் களா? நான் பாகவதர், பாகவதர் என்று சொன்னதும், யாரைச் சொல்கிறார்களென்பது தெரியாமல் திணறினேன் என்று கூறிவிட்டு, மானேஜரைப் பேச வைப்பார்; "நம்ம ரங்கன் விஷயத்தைக் கேட்கிறார்" என்று ஆரம்பிப்பார். மானேஜர், மளமளவென்று கொட்டுவார். "ரங்கயாகவதரா! அவர் நிலை இப்போது ரொம்ப உயர்ந்து போயிட்டுது சார். அவர் கம்பெனிக்கு வந்து நடிக்கமாட்டார்-கம்பெனி அவர் ஊருக்கு வந்து நடிக்க வேண்டுமாம். நன்றிகெட்ட பயல் கள் சார்! நான் ரொம்ப நாளாகச் சொல்லி வருகிறேன் இவருக்கு- வேண்டாம், நீங்கள் அவனைத் தூக்கித் தூக்கி விடுகிறீர்கள் - ஆபத்து-ஆபத்து என்று இவர் கேட்கவே இல்லை--கந்தலீலா போட்டால் அவன் தான் முருகன்--ராம லீலா போட்டால் அவன்தான் ராமன் -ராமதாஸ் போட்டால் அவன்தான் நவாபு, பவளக்கொடி நடத்தினால் அவன்தான் அர்ஜுனன்- இப்படி அவனுக்கே 'சான்ஸ்' கொடுத்தபடி இருந்தார்—இப்போது சொன்னேன்- அவன் கோபுரத்தின் மீது ஏறிக்கொண்டான்" என்பார். குருமூர்த் தியோ, அதைப் பற்றிக் கவலைப் படாதவர் போல, "கோபு ரத்தின் மேலே குரங்குகூடத் தாண்டா ஏறிக் கொள்ளும்; போடா போ! நம்ம கம்பெனியிலே, எத்தனையோ ரங்கு வந்தான் - சோமு வந்தான்- போனான் என்று கூறுவார். இவ்வளவுக்கும், ரங்கனுக்கும் கம்பெனிக்கும், கணக்குப் பைசல் ஆகிவிடவுமில்லை -ரங்கதுரை வேறு கம்பெனிக்குப் போகவுமில்லை--ஸ்பெஷலுக்குக்கூடப் போகவில்லை.