உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 ராஜபார்ட் கம்பெனி நின்றுவிடவில்லை! ரங்குவும் பட்டினியாக இல்லை!! கம்பெனியில் இல்லாதது ரங்கதுரைக்கு ஒருவகை நிம்மதி தரவே ஆரம்பித்தது. ரங்கு இருப்பதும் இல்லாது போவதும் கம்பெனியை எந்த விதத்திலும் பாதிக்காது என்பதை நிரூபித்தாக வேண் டிய பெரும் பொறுப்பு குருமூர்த்திக்கு ஏற்பட்டது. முத லிலே அவருக்குத் தோன்றிய யோசனை, சோமுவையோ, தாமுவையோ, 'தூக்கிவிட்டு' விளம்பரம் செய்து. இடத்தை அடைக்க வேண்டும் என்பதுதான். பிறகு, அத னால் ஏற்படும் சிரமமும், அதன் விளைவும் எப்படியாகுமோ என்ற கவலையும்ஏற்படவே, அந்த யோசனையைக் கைவீட்டு விட்டு, கம்பெனியில், கண்கவரும் சீன்கள், புதிய உடைகள், கலர் லைட்டுகள்-டர்னிங் சீன்கள் இவைகள் உண்டு என் பதையே அதிகமாக விளம்பரப்படுத்தி, யார் வேண்டுமானா லும் எந்த வேஷம் வேண்டுமானாலும், போடக் கூடிய வித மான, 'தசாவதாரம்' நாடகத்தைத் தயாரித்து கம்பெனியின் வலிவையும், வனப்பையும் வளர்க்கலானார். சோமு ஒரு நாளைக்கு மகா விஷ்ணுவாக வருவான்--ஒரு நாளைக்கு. துவாரபாலகனாவான்-ஒரு நாளைக்கு தாமு கிருஷ்ண னாவான். மறுநாள் அவனே ருக்மணி வேஷம் போடுவான்; கம்சன் வேஷத்துக்கு கேட் கந்தனே பொருத்தம்—அவனுக் குப் பேசத் தெரியாது- ஆகவே அவன் வாய் அசைக்கட்டும் 'மைக்கிலே' சொக்கன் பேசிவிடட்டும்--என்று, இப்படிப் பட்ட ஏற்பாடுகளுடன் 'தசாவதாரம்' நடைபெற்று வந் தது. ரங்கதுரை இல்லாமல் கம்பெனி நடைபெற முடியும் என்பதை நிரூபித்துவிட்டார், குருமூர்த்தி, ரங்கதுரையால், கம்பெனியில் இல்லாமல் நான் இருக்க முடியும், என்று மட் டுந்தானே காட்ட முடியும்? அவன் வேறு கம்பெனியில் சேர முடியாது; மற்ற எந்தக் கம்பெனியிலும் அவன் விரும்பும் நிலைமை கிடையாது-- அவனாகப் புதிய கம்பெனி வைக்க வும் முடியாது—-அவனுக்கு அதற்கு வேண்டிய ஆற்றல் கிடையாது; அவசியமும் ஏற்படவில்லை. இந்த நிலைமை.