உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரங்கதுரை 93 யிலேதான், ரங்கதுரையின் பூர்வோத்திரத்தைப் பற்றிக் குருமூர்த்தி காலட்சேபம் செய்யலானார். அதற்கு ரசமான பக்கவாத்தியக்காரர்களும் சேர்ந்தனர். 'கம்பெனி, காட்பாடியில் நடந்து கொண்டிருந்தது. வசூல் கொஞ்சம் குறைவுதான். ஆனால் வசூலுக்காக அங்கு தங்கி இருக்கவில்லை. ‘கண்டிராஜா' தயாராகிக் கொண்டி ருந்தது. அந்தச் சமயத்திலே, குருமூர்த்தி ஒருநாள் உலாவப் போனார் (உலாவப் போனார் என்பதற்கு முழுப்பொருள், மளிகைக் கடைக்காரருக்குத் தரவேண்டிய கடனுக்குச் சமா தானம் சொல்லி ஜப்திக்கு வரவேண்டாம் என்று கேட் டுக் கொள்ளப் போனார் என்பது.) உலாவப் போன இடத் தில், நீதிநாதன் கோயிலில், உட்கார்ந்து கொண்டு, ரங்கு பாடிக் கொண்டிருந்தான். சாரீரம் சுகமாக இருந்தது- அவனிடம் பேசினதில், குணமும் நல்லதென்பது குருமூர்த்திக் குத் தெரிந்தது. தெரியவே, 'தம்பி, இப்படிப்பட்ட சாரீர சம்பத்தை வைத்துக் கொண்டு, ஏன் இங்கு இருக்கிறாய்? இந்த நீதிநாதன் கோயிலிலே பெருச்சாளிகள் உலாவுமே தவிர, ஜனக்கூட்டமே அதிகம் இராதே - ஏன் நீ இங்கே இருக் கிறாய் - நம்ம கம்பெனிக்கு வந்துவிடு" என்று கூற, "எனக் குச் சங்கீதத்தில் பிரியம். கலைக்குப் பணி புரிய வேண்டும் என்பதிலே ஆர்வம்- ஆகவே அதை இங்கிருந்தே செய்ய முடியுமே" என்று வாதிட, "பைத்யக்காரா! இடத்துக்கு ஏற்றபடிதானே இயல்பு அமையும். நீதிநாதன் கோயிலிலே இருந்தால், உன் சாரீரம், கொஞ்ச நாளில் 'தர்பார்' இரா கம் பாட மட்டும்தான் பயன்படும். இந்த இடம் உனக்கு ஏற்றதல்ல. வா, நமது கம்பெனிக்கு" என்று அழைத்து வந்தார். வந்த ரங்கன், கைகட்டி வாய்பொத்தி நின்று, குருமூர்த்தி குளிக்கப் போனால் செம்பு எடுத்துக் கொடுத்து, படுத்துக்கொண்டால், கை-கால் பிடித்து, சாப்பிட உட்கார்ந் தால் விசிறி கொண்டு வீசி, கம்பெனிக்குக் கிளம்பினால், கால் செருப்பும் கைக்குடையும் எடுத்துக் கொடுத்து, அடக்க ஒடுக்கமாக இருந்து பாகவதரானான்; ராஜபார்ட்டானான். இவ்வளவு பெரிய நிலைமைக்கு வந்த பிறகு, கம்பெனி