உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 ராஜபார்ட் கொண்டு, பெரும் புகழுடன் இருந்தவன் இப்படியானானே! இப்போது அவன் விலாசம் என்ன! அவனுக்கு ஏது செல் வாக்கு? என்றும் பேசினர்—அதுவும் அவனை ஏசுவதாக எண்ணிக்கொண்டு. கம்பெனியில் பெரும் புகழும் பணமும் இருந்தும், ஏன் அதை இழக்க ரங்கன் துணிந்தான்?-இதை எண்ணுபவர்கள் இல்லை. 'சுகம், பணம்தேட கம்பெனியை விட்டு வெளியேறினான் என்று பேசுகிறோமே! அந்தச் சுக மும், பணமும் அவனுக்குக் கம்பெனியில் கிடைத்ததே! கிடைத்ததை விட்டுவிட்டு, வேறிடம் செல்வானேன்?'- என்றும் அவர்கள் எண்ணிப் பார்க்கவில்லை; எண்ணம் வர வில்லை. "ராஜபார்ட் பங்கதுரை, வாழ்க்கையை நடத்துவது என்ற அளவுக்குத்தான் வந்துவிட்டான். அவன் ஏதேதோ செய்வான் - செய்யப் போகிறான் என்றெல்லாம் எண்ணி னோம் - கடைசியில் அவன் வெறும் ஆளாகிவிட்டான்!பைத் யக்காரன். ஒரு விதத்திலே பார்த்தால் பரிதாபமாகக்கூட இருக்கிறது- என்றனர் சிலர். "என்னமோ சூது செய்கிறான்! ஏதோ சதி! என்று பேசினர் சிலர். ரங்கதுரை, என்ன சதி செய்தாலும் நம்ம குருமூர்த்தி யிடம் ஒன்றும் பலிக்காது” என்றனர் சிலர். "அவர் சும்மா இருந்தாலும், நாங்கள் சும்மா இருக்க மாட்டோம்" என்றனர் வேறு சிலர். ரங்கதுரையோ, உள்ளூரில், வெற்றிலை பாக்குக்கடை வைத்துக் கொண்டு உட்கார்ந்தான். ராஜபார்ட் ரங்கதுரை பாகவதர் வெற்றிலை பாக்குக் கடை என்று போர்டு கிடையாது -- ஆனால், ஊரிலே பேச்சு அவ்விதம்தான். வெற்றிலை பாக்குக் கடையின் மூலம் டபுள்ராயல், சிங்கள் ராயல் விளம்பரம் கிடையாது ரங்கதுரைக்கு! எப் படிக் கிடைக்கும்? ஆனால் அதேபோது கரகரப்பிரியாவுக்