உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரங்கதுரை 97 நல்லது; அதைச் செய்தால் நல்லது என்று கூறுவதிலேயே காலங்கழித்து வந்தான். < 'அதோ பார், போகிறான் - ராஜபார்ட் ரங்கதுரை'- வீதியிலே ஒருவர் சொல்லுவார். வேறொருவர், 'ரங்கன் என்று சொல்லேண்டா!ராஜபார்ட்டாம்,ராஜபார்ட்!அதெல் லாம் போய் ரொம்பக் காலமாகிவிட்டதடா!" என்பார்-- ரங்கதுரையின் காதிலே, அந்தப் பேச்சு விழும்--ஆனால் அதேபோது, அதே ஆசாமிதான், "ரங்குவிடம் மற்றவர்கள் இராகம் பிச்சை கேட்க வேண்டும்-ராஜபார்ட்டுக்கு, ரங் குவை வீட்டால் வேறு யார் இருக்கிறார்கள்—ரங்குவின் ராக ஆலாபனத்தாலேதான் கம்பெனியே ஓடுகிறது வேறு கம்பெனியிலே மட்டும் ரங்கதுரை இருந்தால், இந்நேரம் எவ்வளவோ 'பெரிய' வித்வானாகியிருப்பார்" என்றெல் லாம் புகழ்ந்தவர். உள்ளன்புடன் என்பது கவனத்துக்கு வரும் வந்ததும், முதலில் கிளம்பிய பெருமூச்சை, ஒரு புன்னகை கிளம்பித் தோற்கடித்துவிடும். ராஜபார்ட் ரங்கதுரை பாகவதரின் மனப்போக்கு, கம்பெனி முதலாளியின் போக்கினால் தாக்கப்பட்டதிலிருந்து படிப்படியாக மாறி மாறி, கம்பெனியில் மனக்கஷ்டத்தையும், நடிப்பதே வீண் சிரமத்தையுந்தான் தருகிறது என்ற எண்ணத்தை உண்டாக்கிற்று. இத்துடனும் நிற்க வில்லை. மனம்தானே! 'ரங்கதுரை இல்லாவிட்டால் கம் பெனி நடைபெறாதா?" என்ற பேச்சு, 'கம்பெனியில் இல்லா விட்டால், ரங்கு நடமாடவே முடியாதா' என்ற பதிலொலி யைத்தானே கிளப்பும்! ரங்கனின் பேச்சல்ல, அவன் நட வடிக்கை, அந்தப் பதிலைத்தான் தந்தது. 'கம்பெனி மூலம்' பெரும் புகழும் பணமும் பெற்றுக் கொண்டு ஓடிவிட்டான். ரங்கன் பணம் திரட்ட, சுகம் அனுபவிக்க என்று பேசினர்-ரங்கனை ஏச! ஆனால் அவர்களே, 'கம்பெனியில் அவனுக்கு எவ்வளவு செல்வாக்கு, புகழ், வசதி, சுகம் தந்தார்கள்! அவைகளைப் பெற்றுக் பூ-157-செ-4