உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 ராஜபார்ட் "இதை வெளிப்படுத்த வேண்டும்' தூண்டிவிடுவோர் பேசினர். "நான் இதையேதான் சொல்லிக்கொண்டு வருகிறேன். இதைச் சொன்ன உடனே, ரங்கதுரைமீது கோபம் பிறக் கிறது- பலபேர் ஏசுகிறார்கள். இப்படிப்பட்ட 'அந்தஸ்து' யாராலடா கிடைத்தது - அவரை மறந்துவிட்டாயே -- கம்பெனியை விட்டுப் போய்விடுகிறாயே" என்றுகூடக் கேட் டனர் என்றார், ஒரு வெற்றி காணாதார். பிளேட் கிடைத்ததோ வெள்ளி! முலாம் தங்கம்! கிராம போனில் ரங்கு பாடும்போதுகூட, கம்பெனியில் இருந்தால் செய்யக்கூடிய கலைத்தொண்டிலே ஒரு பகுதியாவது பிளேட் கொடுப்பதன் மூலம் செய்வோம் என்று எண்ணிக்கொண்டு தானிருந்தான். அந்தச் செயலே துரோகச் செயலாகக் கூறப் பட்டது! கம்பெனி நடந்து கொண்டிருந்தது-ரங்கதுரை தனி உலகில் சஞ்சரிக்கலானான். "ரங்கதுரை, இப்போதெல்லாம், நந்தவனத்திலேதான் இருக்கிறான்-ஒருவர் ஆரம்பிப்பார். "மலரின் மணத்தை ரசிக்கிறான் போலும்". இன் னொருவர், கிண்டல் செய்வார். 'மரகதம் என்று ஒரு குட்டி உண்டு." குறும்பை இன்னொருவர் துவக்குவார். என்று "ஏனய்யா மறைக்கிறீர்? அவளுடன் கூடிக்கொண்டு குஷாலாகக் காலந்தள்ளுகிற கிறான்-- சொல்லேன்-வேறொரு வர், சம்பூர்ணமாக்குவார்! மரகதம், மாளிகையில் மன்னார்சாமியுடன், தூவி விளையாடிக் கொண்டிருப்பாள்! மலர் ரங்கதுரை ராக ஆராய்ச்சியிலோ, பிளேட் கம்பெனிக் காரரிடம் சொல்லி, கலை உயர்வுக்காக இதைச் செய்தால்