உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரங்கதுரை 95 "இப்போதுதான், கொஞ்சம் தாராளமாக உலாவ உலக விஷயத்தை உணர. நிம்மதியும் வசதியும் கிடைத்தது" அவன் எண்ணினான் அதுபோல். கம்பெனியும் நடைபெற்று வந்தது—ரங்கனின் கால மும் ஓடிக்கொண்டே இருந்தது. இந்த 'மெழுகு' நிலையை விட்டுவைக்கும் விருப்பம் இல்லாத சிலர், கொஞ்சம் 'அனல்' காட்ட வேண்டும் என்று கிளம்பினர். "கேள்விப்பட்டீர்களா விஷயத்தை? ரங்கதுரைக்கு ஒரு சான்ஸ் அடித்ததாமே. கிராமபோன் ரிகார்டு கொடுத் திருக்கிறானாம் -ஆயிரம் ரூபாயாம், பிளேட் ஒன்றுக்கு” என்று கூறினர், குருமூர்த்தியிடம். அவருக்குக் கோபம் வரா மலா இருக்கும்! அவருடைய கோபத்தைக் குறைப்பதாக எண்ணிக் கொண்டும், ரங்குவின் குணம் மாறவில்லை என் பதை அவருக்குக் கூறவேண்டுமென்று நினைத்துக் கொண் டும். சில நற்குணம் படைத்தவர்கள், "பிளேட்டில்கூட, ரங்கதுரை உங்களைப் பற்றிய புகழ்தான் பாடியிருக்கிறார் என்றனர். அவர் மனம் குளிரும் என்று எண்ணினர். விஷப் பயிரிடுவோர். வேறு எதை அவன் பாடமுடியும்? அதைப் பாடினால்தானே "சான்ஸ்”- என்றனர். குருமூர்த்தி இதை ஆமோதித்தார். எனவே இதனையே, அனலாக்கி "ரங் கன் பிளேட் கொடுக்கப் போய்விட்டவன்-அதிலே பணம் திரட்டப் பார்க்கிறான்" என்று பேசலாயினர். 'பத்துப் பிளேட் கொடுத்தானாம். அதற்கு அவனுக்கு ஒரு தங்கப் பிளேட் பரிசு தந்தார்களாமே" ஒரு வதந்திப் பிரியர் கூறி னார். "அந்தப் பிளேட்டிலே வைரம் ஏழு புதைத்துத் தந் தார்கள்!" - என்றார், பிளேட்டின் எடை, விலை,சகலமும் தெரிந்தவர் போல நடித்த ஒருவர். "தங்கப் பிளேட்! அதிலே வைரம் இழைத்திருக்கிறது!! பயல், மண்டைக் கர்வியாகாமல் எப்படி இருக்க முடியும் -குருமூர்த்தி எண்ணினார். "இவ்வளவும் தங்களால்"- தூபமிடுவோர் கூறினர்.