பக்கம்:சேக்கிழார்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



டாக்டர் மா. இராசமாணிக்கனார் 55

அரசமாதேவி மயக்கம் தெளிந்தாள்; உடனே ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றாள்; அச் சுடுகாட்டில் அம் மகனை வைத்துக் கொண்டு செய்வது அறியாது புலம்பினாள். அப்பொழுது தெய்வம் ஒன்று அவளது தோழி போல் அங்குத் தோன்றி, இம் மகன் இந்நகர வணிகனால் சிறிது நேரத்தில் கொண்டு செல்லப் படுவான். அவனிடம் நின் மகன் வளர்ந்து வருவான். முடிவில் கட்டியங்காரனைக் கொன்று அரசினை அடைவான். கவலை ஒழிக,” என்றது.

சீவகன் வளர்ப்பு

கந்துக்கடன் என்பவன் ஒரு வணிகன். அவன் தன் ஒரு மகவைப் புதைக்க அங்கு வந்தான். அவன் இளஞ் சூரியினைப் போல விளங்கிய சீவகனாகிய குழந்தையைக் கண்டான் உள்ளத்தில் உவகை கொண்டான்; தன் குழந்தைக்குப் பதிலாக இறைவன் தனக்கு மற்றொரு குழந்தை யைக் கொடுத்தான் என்று எண்ணி மகிழ்ந்தான்; அக் குழந்தையைத் தன் வீட்டிற்கு எடுத்துச் சென்றான். அன்று முதல் சீவகன் அவ் வணிகனிடமே வளர்ந்து வரலானான்.

அரச மாதேவி சமணத் துறவிகள் வாழ்ந்து வந்த ஆஸ்ரமம் ஒன்றை அடைந்தாள் அங்குப் பற்று அற்ற நிலையில் தவம் செய்து கொண்டு இருந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சேக்கிழார்.pdf/57&oldid=1085375" இலிருந்து மீள்விக்கப்பட்டது