பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழார் தந்த செல்வம் 19 கெட்டுவிட்டதாக அறிந்த மன்னன் தீப் புக எண்ணுகிறான். பிறருடைய அழுக்கடைந்த gb_6ᏡᏞᏭᏚᏮᏑhöYᎢ வாங்கி, துவைத்துக் கொடுப்பது திருக்குறிப்புத் தொண்டரின் குறிக்கோள் ஆகும். ஒருமுறை அது முடியாமற் போகவே தம் உயிரைவிட முனைகிறார். இவர்கள் அனைவருக்கும் வாழ்க்கையில் தாம் தாம் ஏற்றுக்கொண்ட தொண்டை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும், அதற்கு இடையூறு வந்தால் உயிரைக் கொடுத்தாவது தம் குறிக்கோளை நிறைவேற்ற வேண்டும் என்ற ஒரே எண்ணம் இருந்துவந்தது. அனைவரிடமும் இறையன்பு நிறைந்திருந்தது என்பதைச் சொல்லத் தேவையில்லை. பல காலங்களில், பல இடங்களில் வாழ்ந்த இவர்களிடையே இருந்த இறையன்பு, தொண்டுள்ளம், குறிக்கோள் என்பவை பொதுத் தன்மையாக இருந்தன என்பதைச் சேக்கிழார் கண்டு கொண்டார். ஏனையோர் யார் மனத்திலும் படாத இது, சேக்கிழார் மனத்தில் படவே, தமிழ் மக்களைத் தட்டி எழுப்ப ஒரு சிறந்த கருக் கிடைத்து விட்டதாகவே நினைக்கின்றார். இந்த நிலையில் அவருடைய மனத்தைக் கவர்ந்த திருத்தொண்டத் தொகை என்ற இந்த ஒரு பதிகம் பாடியதற்காகச் சுந்தரரை வணங்குகிறார். அடியாருடைய வெறும் பட்டியல் என்று நினைத்துக்கொண்டிருந்த மக்களுக்கு இது பட்டியல் அன்று, நாடு உய்வதற்காகக் கொடுக்கப்பட்ட மருந்தாகும்; இந்த மருந்தைத் தந்த