பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 சேக்கிழார் தந்த செல்வம் சுந்தரரை நான்கு நூற்றாண்டுகள் கழித்துக்கூடத் தம்மால் வணங்க முடிகின்றதே என்று மகிழ்கிறார். பிறவி வேண்டாம் என்று சொல்லும் பக்தர் களிடையே தம்முடைய பிறப்புக்கு வணக்கம் செலுத்துகிறார் சேக்கிழார். ஏன் தெரியுமா? இந்த மானிடப் பிறவி கிடைத்ததால்தான் திருத் தொண்டத் தொகை பாடிய சுந்தரர்ை வணங்க முடிகிறது என்ற மகிழ்ச்சியில் தம்முடைய பிறப்புக்கு முதல் வணக்கம் செய்கிறார். ஈசன் அடியார் பெருமையினை எல்லாஉயிரும் தொழ் எடுத்துத் தேசம் உய்யத் திருத்தொண்டத் தொகைமுன் பணித்த திருவாளன் வாசமலர் மென்கழல் வணங்க வந்த பிறப்பை வணங்குவாம் - (பெயு 270) சுந்தரர் பாடிய பாடல்களுள் நூறு பதிகங்கள் மட்டுமே இப்பொழுது கிடைத்துள்ளன. சேக்கிழார் காலத்தில் இன்னும் அதிகமாகவும். கிடைத் திருக்கலாம். அத்துணைப் பாடல்களுள்ளும் இந்த ஒரு பதிகத்தை மட்டும். சேக்கிழார் தனியே எடுத்துக்கூறி இப் பதிகத்தைப் பாடிய சுந்தரருக்குத் திருவாளன்' என்று பட்டம் தந்து, வணங்குகிறார். எனவே, சேக்கிழார் நம்மில் பலரும் நினைப்பது