பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292 சேக்கிழார் தந்த செல்வம்

'எனது உரை தனது உரையாக இவையெல்லாம் ஒருபுறமிருக்க, திரு இலம்பயங் காட்டுர் என்ற ஊரில் பாடிய தேவாரப் பதிகத்தின் மூன்றாவது பாடலில் 'எனதுரை தனதுரையாக என்று பாடிய பெருமை காழியில் தோன்றிய இச் சிறிய பெருந்தகையாருக்கே உரியதாகும். இதன் பொருள் என் வாயிலிருந்து வரும் சொற்கள் தேவாரப் பாடல்கள்) இறைவனே நேரிடையாகக் கூறியவை ஆகும்’ என்பதாகும். இம்மட்டோடு நில்லாமல் ஒவ்வொரு பதிகத்தின் இறுதியிலும் இப்பாடல்களைக் கற்பவர் இன்னின்ன பயன்களைப் பெறுவர் என்று கூறுவதோடு நில்லாம்ல், "பயனைப் பெறுவர், ஆணை நமதே!”என்று கூறிய பெருமகனார் இம் மூவருள்ளும் காழிப்பிள்ளையார் ஒருவரே ஆவர். இவற்றை யெல்லாம் நன்குணர்ந்த சேக்கிழார், காழிப் பிள்ளையாரை இறைவனோடு ஒன்றாக வைத்தே புராணம் பாடியுள்ளமையை அறிய முடியும். தனித்தன்மை . . . . . . . . . . . . . . . . ; பத்தொன்பதாம் ஆம் நூற்றாண்டில் தோன்றிய ஞானியாகிய இராமலிங்க வள்ளல் له لBit}′لی பெருமான் நால்வரைப்பற்றியும் புகழ்ந்து பாடியுள்ளார் எனினும், திருஞானசம்பந்தரைக் குறிக்கும்பொழுது மட்டும் ஞானசம்பந்த குருவேட் என்று பாடுவதைக் காணலாம். ஏனைய மூவர் வரலாற்றிலும் ஈடுபட்டு, மனங்குழைந்து, அன்பு