பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காழிப்பிள்ளையாரும் காளத்திவேடனும் * 29. பாலை உண்டமையின் "உவமைஇலாக்கலை ஞானம் உணர்வு அரிய மெய்ஞ்ஞானம் தவ முதல்வர் சம்பந்தர் தாம் உணர்ந்தார் அந்நிலையில். பெ. பு-1973) என்பது சேக்கிழார் கூற்று அறிவின் முதிர்ச்சியில் பயிலப்பட வேண்டிய கலைஞானங் களும் உணர்வின் முதிர்ச்சியில் அடையப்பட வேண்டிய ஞெய் ஞானங்களும் ஆளுடைப் பிள்ளையாரை ஒரே வினாடியில் அடைந்தன. இவை அனைத்தையும் அப்பெருமான் அறிந்தார், தெரிந்தார், தெளிந்தார், பெற்றார், என்று கூறாமல் "அந்நிலையில் உணர்ந்தார்.” என்கிறார், தெய்வச் சேக்கிழார். பலகாலும் சிந்தித்துப் பொருள் உணர வேண்டிய பகுதியாகும் இது. "இதோ இவன்தான்' அடுத்தபடியாக வேதமும்கூட இன்னார் என்றோ இத்தகையவன் என்றோ உடன்பாட்டு முறையில் சுட்டிக் காட்ட முடியாத மூலப் பரம் பொருளை 'இன்னான்.” என்று கூறி 'இதோ இவன் தான்."என்று ஆட்காட்டி விரலால் சுட்டிக் காட்டிய பெருமை உடையவர் ஆளுடைப் பிள்ளையார். இது அல்ல’ என்ற பொருளுடைய "நேதி என்ற சொல்லாலே வேதம் பரம்பொருளைக் குறித்தது. ஆனால், காழிப் பிள்ளையார் பெம்மான் இவன் அன்றே என்ற அண்மைச் சுட்டால் சுட்டிக் காட்டிய பெருமை உடையவர். -