பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

378 சேக்கிழார் தந்த செல்வம் அடுத்து, சிவனடியார் வேடத்துடன் எதிரே நிற்கும் ஒருவர் அவர் எவராக இருப்பினும், வேண்டும் என்று கேட்பதை இல்லை’ என்று கூறாமல் தருதலை இயல்பாக உடையவர் என்கிறார் சேக்கிழார். மூன்று அடிப்படைகள் இயற்பகையார் புராணம் பாடவந்த சேக்கிழார். இந்த இரண்டாவது பாடலிலேயே மூன்று முக்கியமான அடிப்படைகளை நிறுவி, அவற்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்ற கருத்தில், மனித மனவியலின் ஆழத்தில் சென்று மூன்று எல்லைகளை வகுக்கிறார். ஒன்று, எதிரே வருபவர்களைப் பொதுப்பார்வை, சிறப்புப்பார்வை, சிறப்பினுள் சிறப்புப் பார்வை என்ற மூன்று நிலைகளில் நாம் நிர்ணயிப்பதுபோல நிர்ணயிக்காதவர் பூம்புகார் வணிகர். இரண்டாவது, எதிரே இருப்பவர்களைச் சிறப்புப் பார்வை, சிறப்பினுள் சிறப்புப் பார்வை என்ற முறையில் ஆயாமல் அவர்கள் அனைவரையும் தம்மிடம் ஏதோ ஒன்றைப் பெற வந்த சிவனடியார்கள் என்றே நினைக்கின்றார். அவர்கள் கேட்பதை இல்லை என்று மறுக்காமல் எப்பாடுபட்டாயினும் தேடித்தருவது இந்த வணிகரின் இரண்டாவது நிலையாகும். மூன்றாவது நிலை ஒன்றுண்டு. எந்தச் சராசரி மனிதனும் எதிரே உள்ள ஒன்றைக் கேட்டால்