பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

384 சேக்கிழார் தந்த செல்வம் அந்த ஆறு நாட்களில் அவர் தேகப் பிரக்ஞை இல்லாமல் வாழ்ந்தார் என்பதைத் தெய்வச் சேக்கிழார் நேரடியாகக் கூறாமல் நிகழ்ச்சிகளாகக் கூறுகிறார். அது இந்நூலில் முன்னர்க் கூறப் பெற்றுள்ளது. இயற்பகையாரைப் பொறுத்தமட்டில் ஒரளவு வித்தியாசமான வாழ்க்கை வணிகரான தாலும் திருமணம் ஆனவர் ஆனதாலும் அன்றாட மக்களோடு கலந்து உறவாட வேண்டிய கட்டாயம் இயற்பகைக்கு இருந்தது. இவையெல்லாம் அவருடைய உடம்பு வாழ்க்கையின் புற வாழ்க்கைப் பகுதிகளே ஆகும். அகங்கார, மமகாரம் கடந்து தேகப் பிரக்ஞை அற்று வாழ்கின்ற ஒருவர் எதிரே உள்ளவர்களை அறிந்துகொள்வதும் அடையாளம் கண்டு கொள்வதும் இயலாத காரியம். பல்லாண்டுகள் பழகிய காரணத்தால் கேட்ட கேள்விக்கு விடை அளிப்பதும் சில சொற்களைக் கூறுவதும் இயல்பாக அமைந்து விட்டன . குறித்து வேண்டிய மூன்றாவது நிலையின் முதிர்ந்த படியில் உள்ள இயற்பகையாரிடம் ஓர் அந்தணன் வருகிறான். அவனுடைய வேடம் தூர்த்தவேடம் என்று சேக்கிழாரே கூறுகிறார். அவனை ஏன் இயற்பகை கண்டு கொள்ளவில்லை? வணிகனாக இருக்கின்ற ஒருவனுக்கு ஒருவரைப் பார்த்தமாத்திரத்தில் எடைபோடும் சக்தி இருப்பது இயல்பே ஆகும்.