பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/396

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரைக்கால் அம்மையார் கணவன் விஷயத்தில் இதனைக் கண்டோம் எதிரே நிற்பவன் தூர்த்தனா, தூயவனா, சிவனடியானா என்று பகுத்து உணரும் நிலையில் இயற்பகை இல்லை. தெளிவான இந்த முடிவை முதலில் அறிந்துகொள்வது பெரும் பயனை விளைக்கும். இந்த வேடத்துடன் வந்த மறையவன் இயற்பகையாரை நோக்கி அவரைச் சிக்க வைக்கும் ஒரே நோக்கத்துடன் எவ்வளவு சாமார்த்தியமாக பேசுகிறான் என்பதைத் தெய்வச் சேக்கிழார் மிக அற்புதமாகப் படம் பிடித்துக் காட்டு கிறார். "கொன்றைவார் சடையார் அடியார்கள் குறித்து வேண்டிய குணம்எனக் கொண்ட ஒன்றும் நீர்எதிர் மறாதுஉவந்து அளிக்கும் உண்மை கேட்டுநும் பால்ஒன்று வேண்டி இன்று நான்இங்கு வந்தனன் அதனுக்கு இசையல் ஆம்எனில் இயம்பல் ஆம்' என்றான். (பெ. பு-409) இப்பாடலிலிருந்து ஒன்றை நாம் அறிய முடிகிறது. கேட்கத் தகாத ஒன்றுக்கு வந்தவன் அடி போடுகிறான் என்பதை நாம்கூட எளிதாக அறிந்து கொள்ள முடியும். இப்பொழுது அவன் கேட்டவற்றை விரிவாகச் சிந்தித்துப் பார்க்கலாம். அடியார்கள் வேண்டிய ஒன்று என்று சொல்லி இருந்தாலே அது போதுமானதாகும். வேண்டிய ஒன்று என்றுமட்டும் குறிப்பிட்டுவிட்டால்