பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/423

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

412 சேக்கிழார் தந்த செல்வம் என்று விரும்புகிறார். அது எதனால் என்றால் இந்த உலகத்திலே கணவன் தன்னைத் தெய்வம் என்று வைத்துவிட்ட பிறகு இந்த உடம்போடு இந்தச் சமுதாயத்தில் வாழ்வது கடினம், அது இன்றைய சமுதாயத்தில் கூடக் கடினம் என்றால் அன்றைய சமுதாயத்தில் கேட்க வேண்டியதே இல்லை. எனவே இந்த சமுதாயத்தில் வாழ முடியாது என்பதை அறிந்து கொண்ட பெருமாட்டியார் இப்போது நேரிடையாக இறைவனிடம் செல்ல வேண்டுமென்று நினைக்கிறார். அப்படியானால் அவ்வளவு துணிவோடு சொல்கிறவர் இந்த உடம்போடு சென்றிருக்கலாமே என்றால், சமுதாயத்தை நன்கு அறிந்தவராகிய அவர் ஒரு பெண் தனிப்பட்ட முறையிலே அதுவும் இளமை நிறைந்த ஒரு பெண், அழகு நிறைந்த ஒரு பெண் சமுதாயத்தில் தனித்து வாழ்தல் கடினம். அதைவிட கடினம் அவள் ஒரே குறிக்கோளோடு இறையன்பு செலுத்துதல் என்பது. எங்கே சென்றாலும் மக்களோடு சேர்ந்துதானே வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. ஏன் திருமணம் நடக்கவில்லை? ஏன் கணவனை விட்டு வந்தாள்? என்கிற இப்படிப் பட்ட பிரச்சினைகளை இந்தச் சமுதாயம் கிளப்பும் அதன்ால் தான் அம்மையார் இந்தச் சமுதாயத்தை விட்டு ஒதுங்கிப் போகவேண்டுமென்ற எண்ணத்தில் தான் இந்த உடம்பை நீக்கி பேய் வடிவு வேண்டும் என்றும் உன் திருவடிக்கு வரவேண்டுமென்றும் விரும்பினாரே தவிர வேறு இல்லை என்பதைப் புரிந்து கொள்ள