பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/424

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழார் தந்த செல்வம்-இறுதிப் பகுதி. 413 முடியும். அதைத் தவிர வேறு எந்த கதையிலும் அடியார்கள் இறைவனிடம் செல்ல முயன்றதாக வரலாறு இல்லை. இறைவனே அவர்களை நோக்கி வந்திருக்கிறான் என்பது பெரியபுராணத்தின் தனிச் சிறப்பாகும். இனி இந்த அடிப்படையைப் பார்க்கும்போது இவர்கள் தொண்டு, குறிக்கோள் என்பவற்றில் இறையன்பு எந்த இடத்தைப் பெற்றது என்று சிந்திப்பது நலம் பயக்கும். மூலமாக இருப்பது இறையன்பு என்பதில் ஐயமே இல்லை. அந்த இறையன்பு நிறைந்திருந்ததனால் தான் இவர்கள் மக்களுக்குத் தொண்டு செய்ய முடிந்தது. மகேசன் தொண்டைவிட மக்கள் தொண்டே சிறந்தது என்று நினைப்பதற்குக் காரணம் இவர்களுடைய இறையன்புதான். எல்லா உயிர்களும் இறைவனுடைய படைப்பு என்பதை அறிந்துவிட்டார்கள். ஆகையால் மக்களுக்குத் தொண்டு செய்வதையே தம்முடைய பெரும் குறிக்கோளாகக் கொண்டனர். மக்களுக்குத் தொண்டு என்று வரும்போது யாருக்குத் தொண்டு செய்தார்கள்? இது முன்னரே விரித்துப் பேசப் பெற்றிருக்கிறது. பெரியபுராணம் சிவன் அடியார் களுக்குத் தொண்டு செய்தார்கள் என்று தான் சொல்லும். அப்படிச் சொல்வதில் தவறு ஒன்றும் இல்லை. அவருடைய காலத்தில் சிவனடியார்கள் என்ற பெயரில் அந்த வேடம் அணிந்தவர்கள்வேடம் அணியாதவர்களும் கூட சிவனடியார்கள்