பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 சேக்கிழார் தந்த செல்வம் கோயில்களில் ஆயிரக்கணக்கானோர் சென்று வழிபட்டனர். அக் கூட்டத்தினரையும் பக்தர்கள் என்றுதான் சமுதாயம் கூறிற்று. இவற்றையெல்லாம் கண்டிருந்தும் சோழர்கள் மேலோ நாட்டுமாந்தர் மேலோ ஏற்படாத ஒரு பெரும் ஈடுபாடு அல்லது பக்தி இவர்களிடம் சேக்கிழாருக்கு எப்படி வந்தது: பல அடியார்கள் வரலாற்றில் அவர்கள் கோயிலுக்குச் சென்றதாகக்கூடக் கதை இல்லை. அப்படி இருந்தும் சேக்கிழார் அவர்களிடம் ஏன் ஈடுபட்டார்? இந்த அடியார்களிடம் ஆடம்பரமற்ற, எளிய வாழ்வு, வேண்டுதல் வேண்டாமை கடந்த நிலை, குறிக்கோள் வாழ்க்கை, இறையன்பு, தொண்டு மனப்பான்மை ஆகிய பண்புகள் ஒட்டுமொத்தமாகக் காணப்பெற்றமையின் சேக்கிழார் இவர்களிடம் ஈடுபட்டார். . - இவர்களிடம் இறைவன் வந்தான் இவர்களைப் பொறுத்தவரை மற்றோர் அதிசயமும் இவர்கள் வாழ்க்கையில் நிகழ்ந்தது. இவர்கள் யாரும் இறைவனைத் தேடிச் சென்றதாக ஒரு வரலாறுமி ல்லை. அதற்குப் பதிலாக, ஆனாயர் முதல் அத்தனை அடியார்களையும் தேடிக்கொண்டு இறைவன் வந்ததாகத்தான் இவர்கள் வரலாறு பேசுகிறது. உலகத்து உயிர்கள் எல்லாம் இறைவன்ை நாடிச் செல்கின்றன; இன்றவனோ இவர்களை நர்டி