பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழாரின் தனித்துவம் 57 வருகின்றான். அப்படி வரும்பொழுதும் தன்னுடைய இறைவடிவைக் காட்டியிருந்தால் இறைவன் என்று அறிந்ததால் இவர்கள் பெருந்தியாகங்களைப் புரிந்தனர் என்று சொல்லலாம். அப்படியுமில்லை. மானுட வடிவில், இன்னும் சொல்லப்போனால் காண்போர் சட்டை செய்யவிரும்பாத கிழட்டு ஏழை வடிவம் தாங்கியே இறைவன் இவர்களிடம் 'வருகிறான். அப்படிப்பட்டவர்களைச் சந்தித்தால் நம் போன்றவர் மனத்தில் ஒரு அலட்சிய பாவம் தோன்றுவது இயல்பு. அப்படி இல்லாமல், எதிரே உள்ள கிழட்டு மானிட வடிவிடம் எல்லையற்ற அன்பும் மரியாதையும் காட்டினார்கள் இந்த அடியார்கள். இன்னும் கூறப்போனால், வந்தவர் கோபத்தை விளைக்கக்கூடிய செயல்களைச் செய்தாலும் நம்பி ஆரூரர் திருமண நிகழ்ச்சி, திருநீலகண்டர், அமர்நீதியார், சிறுத்தொண்டர், இயற்பகையார் என்பவர்களுடைய வாழ்க்கையில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள்) இந்த அடியார்கள் ஒரு சிறிதும் மனங்கோணாமல் தொண்டு செய்வதையே தம் குறிக்கோளாகக் கொண்டிருந்தனர். இவர்கள் யாரும் தம் தொண்டினைச் செய்வதல்லாமல், இறைவனை அடையவேண்டுமென்று அவனை நாடிச் செல்ல வில்லை. தன்னலம் அற்ற இவர்கள் தொண்டாலும், குறிக்கோள் வாழ்க்கையாலும், இறை பக்தியாலும் ஈர்க்கப்பட்ட இறைவன் இவர்களை நாடி வருகிறான் என்பது இந்த அடியார்களின் வாழ்க்கையில் காணப்பெறும் தனிச் சிறப்பாகும். இதுவும் சேக்கிழார்