பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழாரின் தனித்துவம் 61 தேவரின் உவமையைச் சிறிது மாற்றி, நெற் கதிர்கள் மணி பிடிப்பதற்கு முன் தலை நிமிர்ந்து விரிந்து நிற்பதற்கு, "--அரனுக்கு அன்பர் ஆலின சிந்தைபோல அலர்ந்தன: கதிர்கள் எல்லாம்” (பெ. பு-7) என்றும், முற்றிய கதிர்கள் வளைந்து நிற்பதற்கு, "பத்தியின் பாலர் ஆகிப் பரமனுக்கு ஆளாம் அன்பர் தத்தமில் கூடினார்கள் தலையினால் வணங்குமா போல்’’ (பெ.பு-72) என்றும் உவமை கூறுவது அவரது மனத்தில் மேலோங்கி நின்ற பக்திச்சுவைக்கு எடுத்துக் காட்டாகும். . சேக்கிழார் தமக்கு முன்னர் இருந்த தமிழ் இலக்கியங்கள் அனைத்தையும் துறைபோகக் கற்றுள்ளார் என்பதையும் அறிதல் வேண்டும். சிந்தாமணி சமண நூல்; ஆதலால் அதனைப் புறக்கணித்தார் என்று சேக்கிழார் புராணம் பாடிய பிற்காலப் புலவர் அறியாமை நகைப்பிற்கு உரிய தாகும். 9ம் நூற்றாண்டில் தோன்றிய கம்பனுடைய இராம காதையையும் 10ம் நூற்றாண்டில் தோன்றிய திருத்தக்கதேவரின் சிந்தாமணியையும் சேக்கிழார் நன்கு பயின்றுள்ளார் என்பதையும் அவர்கள்