பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 சேக்கிழார் தந்த செல்வம் இருவருக்கும் பிற்பட்டுத் தோன்றியமையின் அவர்களைப் பின்பற்றி அவர்கள் கூறிய உவமைகள் முதலியவற்றையும் அழகுபடுத்துகிறார் என்பதையும் அறியவேண்டும். தேவரின் ஓர் gł.6}}{o) isłóð) of J எவ்வாறு சேக்கிழார் பயன்படுத்தினார் என்று மேலே கண்டோம். அதே போலக் கம்பநாடனுடைய உவமையை எவ்வாறு பயன்படுத்துகிறார் என்று காண்போம். அயோத்தியில் ஒடும் சரயு நதிபற்றிப் பேசவந்த கம்பன், சரயு என்பது-தாய் முலை அன்னது, இவ் உரவுநீர் நிலத்து ஓங்கும் உயிர்க்கு எலாம்” - (கம்ப-23) என்று பாடுகிறான். இந்த உவமையில் ஈடுபட்ட சேக்கிழார் அதில் உள்ள குறையையும் காண்கிறார். சரயு என்பது ஜீவநதி, ஆண்டு முழுவதும் நீர்வற்றாமல் நிறைந்து ஒடும் நதியாகும் அது. இதனைத் தாய் முலைக்கு ஒப்பிடுவதில் ஒரு குறை ஏற்படுகிறது. குழந்தை தாயின் முலையில் வாய் வைத்துக் குடிக்கும்பொழுதுதான் பால் சுரக்குமே தவிர, சாதாரண நிலையில் பால் வெளிவருவது இல்லை; என்றாலும், மிக அற்புதமான உவமையாகும் இது. இந்தக் குறையை நீக்கி, இதே உவமையைப் பயன்படுத்துகிறார் சேக்கிழார். தொண்டை நாட்டில் காஞ்சியை அடுத்து ஒடும் பாலாற்றைத் திருக்குறிப்புத்