பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வளர்புகழ் வாழ்த்துரைகள் x! பி.ஓ.எல். அவர்கள் நிறைவுறுத்தினர்கள். திரு. முதலியார் அவர்கள் சென்னைப் புதுக்கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராக இருப்பவர். தமிழ் ஆராய்ச்சி மிக்கவர்; சைவ சமய சாத்திரப் புலமையாளர். அவர்கள் உரை விளக் கத்தில் அவற்றைக் காணலாம். பூர் சேக்கிழார் வேளாண் மரபினர். அம்மரபினர்க் குரிய சில வழக்காறுகளும் உரிமைகளும் உணர்ந்தவர்களே அவற்றை அறிய முடியும். அரசர்க்கு முடிசூட்டுங் காலத்தில் அம்முடியை ஒர் வேளாளர் தம் கையால் தொட்டுக் கொடுக்கும் வழக்கம் இருந்திருக்கிறது. அவ் வழக்கம் அறியாதவர், இப்பிள்ளைத் தமிழில் சப்பாணிப் பருவ முதல் பாடலில் வரும், இறைபுனேய மணிகள் தழையும் முடிதொட்டுக் கொடுத்தருள் மலர்க்கைகொடு சப்பாணி கொட்டியருளே’ என்ற வரிகட்குப் பொருள் அறிய முடியாதன்ருே? இவ் விடத்து உரையாசிரியர் அவர்கள், இராமபிரானுக்கு முடி சூட்டியபோது, வெண்ணெயூர்ச் சடையன் தங்கள் மரபுளோர் கொடுக்க வாங்கி வசிட்டனே புனைந்தான் மவுலி' என்ற கம்பர் கூறிய வாக்கை மேற்கோள் காட்டியது மகிழ் தற்குரியதாம். இப்படிப் பலவிடங்கள் உள இவ்வுரையில். உரையில் ஆங்காங்குச் சொல் நயங்களே விளக்கி யுள்ளார்கள், செங்கீரைப் பருவம் இரண்டாம் பாடவில் வரும், 'ஒருவரியதாம் செப்பலுற்ற பொருள்' என்ற தொடரில், ஒருவரிய என்பதற்குக் கூறிய நயம் சிறப் புடையதாகும். சேக்கிழார் பாடிய பெரியபுராணத்தில், 'செப்பலுற்ற பொருள்' எனத் தொடங்கும் பாடலும் ஒன்று. அதைப் பிள்ளையவர்கள் ஒருவரிய என்று அடை கொடுத்துச் சொன்னர்கள். அதுபற்றி உரை வகுத்தவர், 'சில நூல்களில் உள்ள பாடல்களை இவை இடைச் செருகல் என நீக்க முயல்வர்; அங்ங்ணம் செப்பலுற் ற என்ற செய்யுளை நீக்க இயலாது; ஆகவே, அதனே ஒருவரிய என்று அடை கொடுத்துப் பாடினர்' என்று விளக்கியது இன்பம் பயப்பதாகும். இவ்வுரை பேருரையாக இருக்கிறது. ஒவ்வொரு பாட லுக்கும் தந்துள்ள உரை, ஒவ்வொரு பாடலுக்கும் சொற்