பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்புப் பருவம் 67 இன்றி இருக்கிறது. ஏனைய இடம் கொப்புளங்கொண்டுளது' என்று கூற நாயனர் தம் மனைவியின் செயலைப் பாராட்டியது கண்டு வியந்து அம்மை யாரை அழைத்துக் கொண்டனர். இவர் இல்லத்திற்குத் திருஞான சம்பந்தர் வ்ந்துற்ருர். இவருடன் பானர் குல திருநீலகண்ட யாழ்ப்பாணரும் வந்துற்றனர். சம்பந்தர் பானர் இருக்க இடம் அளிக்க நாயனுர்க்குக் கூற, நாயனர் மிகப் பரிசுத்தமான இடமாகிய யாக குண்டத்தின் அருகு அழைத்துச் சென்ருர். யாக குண்டத்தினின்றும் தீ எழுந்து வலம் சுழித்து நாயனர் செயலேப் பாராட்டியது போலச் செயல் புரிந்தது. திருஞான சம்பந்தர் இவரைப் பதிகத்தில் பாடினர். சம்பந்தர் திருமணத்தில் இவரும் சோதியுள் கலந்தனர். நமிநந்தி அடிகள் சோழ நாட்டு ஏமப் பேரூரில் அத் தனர் மரபில் பிறந்தார். திருவாரூர் தியாகரிடம் பேரன்பு கொண்டவர். திருநீற்றினிடம் அன்புடையவர். இவர் திருவாரூர் அரநெறி அப்பருக்குத் திருவிளக்கு இடும் தொண்டில் ஈடுபட்டுச் சமணர் இல்லம் சென்று நெய்கேட்க, அவர்கள் 'நீரைக் கொண்டு விளக்கேற்றும்’ என்றனர். இறைவரிடம் முறையிட, இறைவர், இதற்கு அஞ்சாதே; நீரைக் கொண்டே விளக்கேற்றுக’ என்று அசரீரியாகக் கூற, நாயனர் வியந்து திருவாரூர்க் குளத்து நீரைக் கொண்டே விளக்குத் தொண்டு புரிந்தார். இவரது தொண்டை வியந்த சோழ மன்னன் அமுது படி முதலான நிபந்தங்கள் (கட்டளை கள்) ஏற்படுத்தினன். நாயனர் பெருமுயற்சியால் பங்குனி உத்தர விழாச் சிறப்பாக நடந்தது. இவர் திருவிழாவில் கலந்து கொண்டதால், அவ்விழாவில் பலருடன் இணைந்து இருந்ததால், தீட்டுப்பட்டதாக நினைத்து வீட்டிற்குச் செல் லாது வெளியே தங்க, அவர் மனேவியார் உள்ளே அழைத்த போது, 'எல்லாச் சாதியாருடனும் கலந்திருந்தமையின் பரி காரம் செய்ய நீர் கொணர்க” என்ருர். அம்மையார் வருவ தற்குள் அயர்ச்சியால் உறங்கிவிட்டார். இறைவர் கனவில் 'திருவாரூரில் பிறந்தவர்கள் யாவரும் சிவகணங்கள்" என்று கூற விழித்தெழுந்த நாயனர் தம் குற்றம் உணர்ந்து