பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செங்கீரைப் பருவம் 23 அரிய தவத் தினைநினைப்பார் அம்பலவர் முன்னுள் அடிஎடுத்துக் கொடுக்கஇவர் பாடிஞர்என் றுரைப்பார் பெரியபுரா னம்கேட்ட வளவர்பிரான் செவிக்குப் பிடிக்குமோ இனிச்சிந்தா மணிப்புரட்டென் றுரைப்பார் என்ற உமாபதி சிவனர் வாக்கால் உணர்க. மன்னர்களின் வெண்கொற்றக் குடையோடு சந்திரனே இயைபு காட்டல் கவிகளின் மரபாகும். சிலப்பதிகார ஆசிரியரும், திங்களைப் போற்றுதும்" என்று பாடியுள்ளது மேலே காட்டப் பட்டது. இதன் உள் கருத்தைக்கொண்டே ஈண்டு, 'வெப்பரிய வெண்மதிக் குடை நிழற்று' என்று கூறப்பட்டுள்ளது. குன்றையம்பதியே குன்றத்துரர். சென்னையிலிருந்து பல்லாவரம் அடைந்து அங்கிருந்து நாலு கல் தொலைவில் சென்ருல் இதனை அடையலாம். அன்றிச் சென்னையிலிருந்து வெளியூர் செல்லும் பேருந்தி (Bus) மூலமும் குன்றத்துரை அடையலாம். இக் குன்றத்துார், முன்னர்த் திருநாகேச்சரத் தையும், அதன் பின்னர் நத்தம் என்ற பெயரிய கிராமத் தையும் கொண்டு இரண்டாகத் திகழ்கிறது. நத்தமே சேக்கிழார் கோவில் திகழும் இடம். அவ்விடமே சேக்கிழார் பிறந்த இல்லம் என்பது இன்று வரை சொல்லப்பட்டு வருகிறது. நத்தத்தில் சைவ வைணவ கோயில்கள் தமது பழமையினை விளக்கிக்கொண்டு இருக்கின்றன. இங்குக் கல்வெட்டுக்களையும் காணலாம். நத்தமே பழம்பெரு சிற்றுார் என்பதைத் தன்னகத்துக் கொண்ட தெருக் களாலும், பள்ளங்களாலும், மற்றும் சில குறிப்புக்களாலும் அறிவித்துக்கொண்டிருக்கிறது. சில ஆண்டுகட்கு முன்பு புதை பொருள் ஆராய்ச்சிக் குழுவினர் ஈண்டுப் புதை பொருள் ஆராய்ச்சியினைச் செய்தனர் என்ருல், இதன் பழமைக்கு வேறு சான்றும் வேண்டுமோ? குளம் ஒன்றும்