பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280 தாலப் பருவம் ஆரணியத் துலர்ந்தகோ மயத்தைக் கைக்கொண் டழகுற நுண்பொடி ஆக்கி ஆவின் நீரணிவித் தத்திரமந் திரத்தி ளுலே நிசையமுறப் பிடித்தோம நெருப்பில் இட்டுச் சீரணியும் படிவெந்து கொண்ட செல்வத் திருநீரும் அதுகற்பம் தில்லை மன்றுள் வாரணியும் முலையுமையாள் கான ஆடும் மாணிக்கக் கூத்தர்மொழி வாய்மை யாலே அடவிபடும் அங்கியினல் வெந்த நீறும் ஆன்நிலைகள் அனல்தொடக்க வெந்த நீறும் இடவகைகள் எரிகொளுவ வெந்த நீறும் இட்டிகைகள் சுட்டஎரி பட்ட நீறும் உடன்அன்றி வெவ்வேறே ஆவின் நீரால் உரைதிகழும் மந்திரங்கொண் டுண்டை ஆக்கி மடம்.அதனில் பொலிந்திருந்த சிவாங்கி தன்னுல் வெந்ததுமற் றுபகற்பம் மரபின் ஆகும் என்ற சேக்கிழாரின் செம்மை சான்ற வாக்குகளைக் காண்க. இவை அனைத்தும் ஆகம உணர்ச்சி பெற்ருல் அன்றிப் பெறப்படாக் கருத்துக்கள் ஆகும். சேக்கிழார் குடியினருள் திருமால் பெயரையும், தாங்கித் திருமால் பற்றும் கொண்டவராக இருந்திருக்கக்கூடும் என்ற ஐயம் எழுதற்கான நிலையில் சிலர் இருந்திருக்கின் றனர். 'சயங்கொண்ட சோழமண்டலத்துக் குலோத்துங்க சோழவள நாடான புலியூர்க் கோட்டத்துக் குன்றத்துரர் நாட்டுக் குன்றத்துரர்ச் சேக்கிழான் மாதேவடிகள் ராம தேவன் என்ற உத்தம சோழப் பல்லவராயன்' என்றும், குன்றத்துார்ச் சேக்கிழான் வரந்தரு பெருமாள் என்ற திருவூரகப்பெருமாள் என்றும், கல் வெட்டுக்களில் வரப் பெரும் பெயர்களைக் காணும்போது, இவ்வையத்தின் உண்மை புலகுைம். ராம என்பது சிவபெருமானுக்கே உரிய மந்திரம். ரா என்பது அரா என்னும் சொல்லின் எழுத்தும், ம என்பது உமா என்னும் சொல்லின் எழுத்தும்