பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாலப் பருவம் 281 சேர்ந்த மகா மந்திரமாகும். ஆகவே, இது தாரக மந்திரம் ஆயிற்று. இராமேச்சிரத்தில் உள்ள இறைவனுக்குரிய, இராம நாதன், ராமசாமி. ராமலிங்கம் என்ற பெயர்களைக் காண்க. இராமனுகிய சாமி, இராமனுகிய நாதன், இராமளுகிய இலிங்கம் என்பதே இத்தொடர்களின் பொருள். இறைவன் திருப் பெயரைத் தாங்கும் பேறு பெற்ற தசரத ராமனுக்குத் தலைவர் என்ற பொருள் கோடலும் உண்டு. ஆகவே, சேக்கிழார் மரபு ராமன் என்னும் பெயர் தரித்ததும், சைவ மரபை ஒட்டியே ஆகும். இக்கருத்துக்கு அரண் செய்யும் முறையில் கம்பர், இறைவனது திருநாமமாகிய ராமநாமத்தின் சிறப்பை, நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே தின் மையும் பாவமும் சிதைந்து தேயுமே சென்மமும் மரணமும் இன்றித் தீருமே இம்மையே இராம என்றிரண் டெழுத்தினுல் ஒராயிரம் மகப்புரி பயனை உய்க்குமே சுராதிபர் செல்வமும் புகழும் நல்குமே வீராய்எனும் பவங்களே வேர ருக்குமே இராமளன் ருெருமொழி இயம்பும் காலேயே மும்மைசால் உலகுக்கெல்லாம் மூலமந் திரத்தை முற்றும் தம்மையே தமர்க்கு நல்கும் தனிப்பெரும் பதத்தைத் தானே இம்மையே எழுமை நோய்க்கும் மருந்தினை இராமன் என்னும் செம்மைசேர் நாமம் என்றும் போற்றிப் பாடினர். இவ்வாறு சிவபெருமானது மந்திரமாகத் திகழும் கார ணத்தினுல்தான் பூரீலபூரீ காமகோடிபீடம் சங்கராசாரிய கவா மிகள் எல்லோரையும் ராமநாமத்தை எழுதச் சொல்லுகிருர்