பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282 தாலப் பருவம் என்று யூகிக்க இடன் இருக்கிறது. என்ருலும் சேக்கிழார் பெரு மாளுரும் வைணவப் பற்றிக்குரியவரோ என்று சிலர், கருத இடம் உண்டாகும். ஆதலின், அவ்வையம் எழாதிருக்கச் தெய் வச் சைவா என்று இவரது ஆழ்ந்த சைவசமயப்பற்றினே இவ்வாறு கூறி நிலைநாட்டினர் திரு பிள்ளேஅவர்கள். சேக் கிழார் தெய்வச்சைவர் என்பதனை இவர்க்குப் கூத்தப்பெரு மானர் உலகெலாம் என்று அடி எடுத்துக் கொடுத்ததி லிருந்து நன்கு உணர்ந்து கொள்ளலாம். (22) 2. நண்பால் எவரும் உறத்தரிக்கும் நலம்கூர் நீற்றின் வெள்ஒளியால் நாவால் எவரும் அரமுழக்கம் நாளும் செயஆம் பேர்.ஒலியால் எண்பால் புலவர் அமுதுகொளற் கெந்த இடத்தும் நெருங்குதலால் ஏர்சால் அரம்பை எழுதலினுல் இயல்நா கேசன் வைகுதலால் கண்பால் கரிதோய் திருமடந்தை காமுற் றிடலால் மாளிகைமேல் கருமால் கிடந்து கண்துயிலும் காட்சித் திறனுல் பொங்கிஎழும் தண்பால் கடல்நேர் குன்றத்துர்த் தலைவ. தாலோ தாலேலோ சகலா கமபண் டிததெய்வச் சைவ தாலோ தாலேலோ (அ. சொ) நண்பு-அன்பு, உற-பொருந்த, நலம்நன்மை, கூர்-மிகுந்த, நீற்றின்-விபூதியின், அரமுழக்கம்ஹரஹரமகாதேவா என்ற ஒலியை, எண்பால்-எட்டுத் திசை யிலும் மதிக்குந் தன்மை, புலவர்-புலவர்கள், தேவர்கள், ஏர்-அழகு, சால்-நிறைந்த, அரம்பை-வாழைமரங்கள், தேவ மாதராம் அரம்பை முதலியோர், நாகேசன்-திருநாகேஸ்