பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/415

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாலப் பருவம் 333 ஊடல்: நம்பி அருளால் சென்றவரும் நங்கை பரவை யார்தமது பைம்பொன் மணிமா ளிகைஅணைந்து பண்பு புரியும் பாங்கினுல் வெம்பு புலவிக் கடல்அழுந்தும் மின்னேர் இடையார் முன்எய்தி எம்பி ராட்டிக் கிது தகுமோ என்று பலவும் எடுத்துரைப்பார் என்னும் இப்பாடலில் ஊடல் கொண்டு இருத்தலையும் காணும்போது, உரிப் பொருட்கவிகள் அமைந்திருத்தலைக் காணலாம். இன்னோரன்ன காரணத்தினுல்தான் திரு பிள்ளே அவர்கள் 'முதற் பொருள் ஆகிய மூன்றும் வேண்டும் இடத்து எய்த' என்று குறிப்பிட்டுள்ளார். பொருள்கோள் பற்றிய குறிப்பினை 'நிரல் நிறை முதலியபொருள்கோள் பகுதியும்” என்னும் யாப்பருங்கல அடியாலும் யாற்றுநீர் மொழிமாற்று நிரல்நிறை வில்புணர் தாப்பிசை அளேமறி பாப்புக் கொண்டுகூட்டு அடிமறி மாற்றெனப் பொருள்கோள் எட்டே என்னும் நன்னூல் சூத்திரத்தாலும் அறிகிருேம். இதனல் பொருள் கோள் எட்டு என்பதும் பெறப்படுகிறது. இப் பொருட் கோள்வகைக்குரிய பாடல்களும் சேக்கிழார் கவி களில் உண்டு என்பதை நன்கு உணர்ந்தே ஆசிரியர், 'ஆற்றுப்புனல் நாமம் பொருள்கோள்முதல் அமைவுற்று உள்ளனவும்” என்று உணர்த்தியுள்ளனர். இவ்வுண்மை யினைக் கீழே காட்டப்பட்டுள்ள பெரிய புராணப் பாடல் களால் உணரலாம். ஆற்றுநீர் பொருள் கோள் இன்னது என்பதை, மற்றைய நோக்கா தடிதொறும் வான்பொருள் அற்றற் ருெழுகும்அஃ தியாற்றுப் புனலே