பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/414

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

832 தாலப் பருவம் இருத்தல்: இந்நிலை இவன் இங் கெய்தி இருந்தனன் இப்பால் நீடும் கன்னிமா மதில்சூழ் மாடக் காரைக்கால் வணிகளுன தன்னிகர் கடந்த செல்வத் தனதத்தன் மகளார் தாமும் மன்னிய கற்பிளுேடு மனையறம் புரிந்து வைக என்று காரைக்கால் அம்மையார் தம் கணவன் பிரிந்திருந்த போது ஆற்றி இருந்த நிலையினையும், பிரிதல் : விடுவதே எண்ண மாக மேவிய முயற்சி செய்வான் படுதிரைப் பரவை மீது படர்கலம் கொண்டு போகி நெடுநிதி கொணர்வேன் என்ன நிரந்தபல் இளைஞ ராகும் வடுவில்சீர் வணிக மாக்கள் மரக்கலம் சமைப்பித் தார்கள் என்று பரமதத்தன் புனிதவதியாரைப் பிரிந்து பொருள் ஈட்ட முயுன்ற முயற்சியில் பிரிதல் துணிந்தமையினேயும், இரங்கல்: கந்தம் கமழ்மென் குழலீர் இதுஎன் கலைவாள் மதியம் கனல்வான் எணைஇச் சந்தின் தழலைப் பனிநீர் அளவித் தடவும் கொடியிர் தவிரீர் தவரீர் வந்திங் குலவி நிலவும் விரையார் மலையா னிலமும் எரியாய் வருமால் அந்தண் புனலும் அரவும் விரவும் சடையான் அருள்பெற் றுடையார் அருளார் என்னும் இப்பாடலில் பரவையார் இரங்குதலையும்,