பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/457

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சப்பாணிப் பருவம் 875 நிதியர் ஆகுவர் சீர்மை உடையர்ஆ குவர்வாய்மை நெறியர்ஆ குவர்பாவம் வெறியர்ஆ குவர்சால மதியர்ஆ குவர்ஈசன் அடியர்ஆ குவர்வான உடையர்ஆ குவர்பாரில் மனிதர்ஆ னவர்தாமே என்று நம்பிஆண்டார் கூறியது கொண்டு தெளிக. அப்பர் அடியைச் சூடுவதுபோலச் சேக்கிழார் திரு அடியைச் சூடினும் இந்நிலை பெறுவர். ஆதலின், 'தரும சினகரன்' என்றனர். ஒரு குறியில் ஆவாகனம் பண்ணுதலாவது இன்னது என்பதை அப்பர், உயிரா வணம்இருந்து உற்று நோக்கி உள்ளக் கிழியின் உருவெழுதி உயிரா வனம்செய்திட் டுன்கைத் தந்தால் உணரப்படுவா ரோடுஒட்டி வாழ்தி அயிரா வனம்ஏ முதுஆன் ஏறுஏறி அமரர் நாடாளா தே ஆரூர் ஆண்ட அயிரா வணமே என்னம் மானே நின் அருட்கண்ணுல் நோக்காதார் அல்லாதாரே என்று குறிப்பிட்டுள்ளதை ஒர்க, இது யோகமுறை ஆவா கனம். கிரியா முறையில் ஆவகனம் செய்தலும் உண்டு. நாராயணிய உபநிடதம் நாராயணனே இறைவனது தேவி என்று கூறிப் பராசக்தியின் பெருமையை உணர்த்து வது. இது சிறந்த உபநிடதங்களிலும் ஒன்று. இதில் வனக் கம் இன்னது என்பதை நாகைப்புராணம், அதிசயம் பயக்கும் நாராயண உபநிடதம் யாரை மதியினில் குறித்தியாவர் வணங்கினும் இவ்வணக்கம் துதிகெழு நினவே என்று சொலும் உனைக் குறித்து - நாயேன் விதியில் செய்வணக்கம் வேறு மேவுமோ விமல வாழ்வே என்கிறது. அதாவது யாரேனும் எத் தெய்வத்தையேனும் வணங்கினலும், அவ்வணக்கம் அம்மை அப்பனேயே சாரும் என்பதாம். இந்த உண்மையினேயே நாராயணியம் கூறுகிறது. நமது சிவஞான் சித்தியாரும்,