பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/456

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

874 சப்பாணிப் பருவம் மலம்மாயை கன்மம் மாயே யம்திரோ தாயி மன்னிச் சலமாரும் பிறப்பி றப்பில் தங்கிஇத் தரைகீழ் மேலும் நிலையாத கொள்ளி வட்டம் கறங்கென நிமிடத் தின்கண் அலமாரும் இறைவன் ஆணை யால் உயிர் நடக்கும் அன்றே என்று கூறி விளக்குகிறது. சேக்கிழார் பெருமானர் கருணைக்கு ஆகரமாய் இருப் பவர். இது குறித்தே அவரை 'தரும சினகரம்" என்றே குறிப்பிட்டனர். அவரது திருக்கரமும் தருமசினகர மாம் கரம் ஆகும். இவர் கரமன்ருே பெரியபுராணமாம் செல் வத்தை அளித்தது! இதனை அநபாயனும் பொதுமக்களும் பெற்றனர் அல்வரோ? அவர் திருமுன் எவர் எதை வேண்டினும் வேண்டுபவர் கட்கு எந்த வித வருத்தமும் இல்லாத முறையில் பொருள் சுரக்கும் பெருந்தகை ஆவார். இவற்றை எல்லாம் உட் கொண்டே, அன்பர்கள் காலையில் எழுந்து அப்பர் பெருமானுர் கூறும் முறைப்படி, இறைவன் திருக்கோவிலில் மெழுகல், மலர் பறித்து இடல் செய்வதற்கும் இயலாராய் இறைவன் திருவருள் பெற்றவர் முன் சென்று எங்களைக் காப்பாற்ற வேண்டும் என்று வேண்டிய போது பெருஞ்செல்வம் எய்தி டு வர். அவர் பாதத்தைப் பற்றி எல்லாம் பெறுவர் என்பதைத் திருநாவுக்கரசர் ஏகாதச மாலையில், பதிகம்மே ழெழுநூறு பகரும்மா கவியோகி பரசுநா வரசான பரமகா ரனாசன் அதிகைமா நகர்மேவி அருளினுல் அமண்முண்டர் அமர்செய்வா தைகள்தீரும் அனகன்வார் கழல்சூடின்