பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/465

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சப்பாணிப் பருவம் 388 அணிந்து, நகும்-விளங்கும், பரிவட்டம்-கடவுள்ஆடை, அம்புகங்கையாகிய நீர், சடையவர்- சடையுடைய சிவபெருமான்ஐயம் - சந்தேகம், தெளியா - தெளிந்து, யாத்திடும்தலையில் கட்டிடும் அள்ளுபு - அள்ளி, கொற்றச் சேவையர் தொண்டு புரிவதில் வெற்றிக் கொண்டவர், காவலதலைவரே. விளக்கம் : இறைவன் தேவி காணத் தில்லையில் திருநடனம் புரிகின்றனர் என்ற உண்வையினச் சேக்கிழார் பெருமாளுர். 'மாதொரு பாகம் நோக்கி மன்னு சிற்றம் பலத்தே ஆதியும் நடுவும் இல்லா அற்புதத் தனிக் கூத்தாடும் நாதனுர்’ என்றருளியுள்ளார். குமரகுருபரர் இக்கருத்தை அழகுபட, "பொன் மன்றம் பொற்ரு மரைஒக்கும் அம்மன்றில் செம்மல் திருமேனி தேன்.ஒக்கும் அத்தேனை உண்டு களிக்கும் கரிவண்டை ஒக்குமே எம்பெரு மாட்டி விழி' என்றனர். இறைவன் இறைவி காணத் திருநடம் புரிதற்குரிய காரணம் இன்னது என்பதை அவரர் திதம்பர் மும்மணிக் கோவையில், பாலுண் குழவி பசுங்குடர் பொருதென நோயுண் மருந்து தாய் உண் டாங்கு மன்னுயிர்த் தொகுதிக் கின் அருள் கிடைப்ப வையம்ஈன் றளித்த தெய்வக் கற்பின் அருள்சூல் கொண்ட ஐயரித் தடங்கண் திருமாண் சாயல் திருந்திழை காணச் சிற்சபை பொலியத் திருநடம் புரியும் அற்புதக் கூத்த என்று விளக்கியுள்ளனர்.